தேர்தலில் போட்டியிடவிருக்கும் 30 ஹரப்பான் வேட்பாளர்கள் சொத்துக்களை அறிவிப்பர்

 

தேர்தலில் போட்டியிடவிருக்கும் வருங்கால ஹரப்பான் வேட்பாளர்களில் 30 பேர், இப்போது பதவியிலிருக்கும் சிலர் உட்பட, தங்களுடைய சொத்துக்களை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அவர்கள் பிகேஆர் துணைத் தலைவர் முகமட் ரபிஸி ரமலியால் உருவாக்கப்பட்ட இன்வோக் மலேசியா என்ற அமைப்பால் உதவப்பட்ட தனிப்பட்டவர்களில் சிலராவர்.

அந்த வருங்கால வேட்பாளர்கள் மக்களுக்காக உழைப்போம் என்று உறுதிமொழிப் பத்திரத்தில் கையொப்பமிடுவார்கள்.

ஞாயிற்றுக்கிழமை சம்மிட் யுஎஸ்ஜேயில் நடைபெறவிருக்கும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வருமாறு அனைத்து மலேசியர்களுக்கும் ரபிஸி அழைப்பு விடுத்தார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடவிருக்கும் 53 வேட்பாளர்களுக்கு உதவுவதற்காக இன்னொரு ரிம5 மில்லியனை பொதுமக்களிடமிருந்து திரட்ட முடியும் என்று இன்வோக் நம்புகிறது.