பெட்ரோலியத்தின் விலை உயர்ந்ததன் காரணமாக, அரசாங்கம் ‘1 மலேசியா மக்கள் உதவிநிதி’யை (பிரிம்) அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று, 2-ஆம் நிதி அமைச்சர் ஜொஹாரி அப்துல் கானி கூறியுள்ளார்.
பீப்பாய்க்கு 1 அமெரிக்க டாலர் அதிகரித்திருப்பதன் வழி, அரசாங்கம் 300 மில்லியன் ரிங்கிட் அதிகம் சம்பாதிக்கக்கூடும் என்று அவர் தெரிவித்தார்.
“இன்றைய கணக்குப்படி, சராசரி எண்ணெய் விலை, பீப்பாய்க்கு அமெரிக்க டாலர் $52 என்றால், டிசம்பர் 2018-க்குள் 62 அமெரிக்க டாலர் சராசரியாக உள்ளது, அதாவது அமெரிக்க டாலர் $10 கூடுதல் என்று அர்த்தம். ஆக, நமக்கு இன்னும் கூடுதலாக RM3 பில்லியன் கிடைக்க வாய்ப்புள்ளது,” என்று அவர் கூறினார்.
இன்று, நாடாளுமன்றத்தில் 2018 பட்ஜெட் விவாதத் தொகுப்பின் போது ஜொஹாரி இதனைக் கூறினார்.
இருப்பினும், அரசாங்கம் பண உதவிதொகையை அதிகரிக்குமா அல்லது பிரிம் பெறுநர்களின் எண்ணிக்கையை அதிகரிக்குமா என அவர் விரிவாக விளக்கவில்லை.