வி.கே. லிங்கத்தைப் பிடிக்க எம்எல்எ, ஜோ லோ வைப் பிடிக்க ஏன் எம்எல்எ இல்லை?

 

நீதிமன்ற அவமதிப்பு குற்றம் புரிந்ததற்காக ஆறு மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் வி.கே. லிங்கத்தை நாட்டிற்கு கொண்டு வர சட்டத்துறை தலைவர் முகமெட் அபாண்டி அலி கிரிமினல் விவகாரங்கள் பரஸ்பர உதவி சட்டம் 2002(MLA)இன் கீழ் நடவடிக்கை எடுத்தால், அது அவருக்கு ஒரு தர்மசங்கடமான நிலையை ஏற்படுத்தும்.

இவ்விவகாரத்தில் அபாண்டியின் நேர்மை குறித்து மூத்த வழக்குரைஞர் ஹனிப் ஹாட்ரீ அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளார். லிங்கம் தற்போது வெளிநாட்டில் இருக்கிறார்.

லிங்கம் விவகாரத்தில் எம்எல்எயின்மீழ் நடவடிக்கை எடுத்தால், ஏன் அபாண்டி அச்சட்டத்தின்கீ வர்த்தகர் ஜோ லோ, இவர் 1எம்டிபி விவகாரத்தில் சம்பந்தப்படுத்தப்பட்டுள்ளவர், மீது இச்சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற கேள்வி எழும் என்று ஹனிப் கூறினார்.

லிங்கத்திற்கு எதிராக இச்சட்டத்தின்கீழ் அபாண்டி நடவடிக்கை எடுத்தால், சுவிட்ஸர்லேண்ட் சட்டத்துறை அலுவலகம் இதே சட்டத்தின்கீழ் கோரியிருந்த உதவியை ஏன் அபாண்டி நிராகரித்தார் என்று மக்கள் வியப்படைவர் என்று ஹனிப் மலேசியாகினியிடம் கூறினார்.

அபாண்டி இச்சட்டத்தின்கீழ் மனு செய்வாரா என்று மலேசியாகினி அபாண்டியைத் தொடர்பு கொண்டு கேட்டு அவரின் பதிலுக்காக காத்திருக்கிறது.