பிரதமர் நஜிப்புடன் ஒப்பிடுகையில், டாக்டர் மகாதீர் நிர்வாகக் காலத்தின் போது, நாடாளுமன்றத்தில் முக்கியமான பல விஷயங்கள் வெளிப்படையாக விவாதிக்கப்பட்டன.
முன்னாள் மந்திரி, ஷேட் ஹமிட் அல்பார், நிர்வாகத்தின் மீது வழக்குத் தொடரக்கூடிய வகையிலான கேள்விகளுக்குக் கூட, விவாத அமர்வில் அல்லது வாய்வழி விசாரணையில் அரசாங்கத்தால் பதிலளிக்கப்படும்; சில சமயங்களில் அப்பதில்களை எதிர்க்கட்சி பிரதிநிதிகள் வெறுத்தபோதும், என்றார்.
“உதாரணத்திற்கு, பூமிபுத்ரா மலேசியா நிதி (பி.எம்.ஃப்.) மற்றும் வெளிநாட்டு நாணய வர்த்தக பிரச்சினைகள் எல்லாம் விவாதிக்கப்பட்டன. அரசாங்கம் அத்தகைய பிரச்சனைகளை விவாதிக்கவோ அல்லது பதில்களை விநியோகிக்கவோ செய்யும்,” என்று அவர் ஃப்.எம்.தி.-இடம் கூறியுள்ளார்.
1990 முதல் 1995 வரை, நாடாளுமன்ற விவகாரங்களைப் பராமரிப்பதற்குப் பொறுப்பாளியாக ஹமிட் இருந்தார். இன்று வரை, மகாதீரைத் தொடர்புப்படுத்தும் அப்பிரச்சினை, பெரும் இழப்புக்களைக் கொண்டிருந்ததால், அந்த நேரத்தில் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது என்று அவர் கூறினார்.
எனினும், அரசர்கள், இன, மத நம்பிக்கைகள் தொடர்பான பல விஷயங்கள், நாட்டில் பல்லின, மத மற்றும் மக்களின் ஒற்றுமையைப் பராமரிப்பதற்காக நிராகரிக்கப்பட்டுள்ளதையும் அவர் ஒப்புக்கொண்டார்.
கலந்துபேசியப் பின்னரே ஓ.எஸ்.ஏ.
தேசிய நெறியாண்மைத் துறையின் (பி.டி.என்.) முன்னாள் தேசிய இயக்குநரான,
ஜொஹரி அப்துல் என்பவரும் அவ்வாறே உணர்ந்துள்ளார். பிஎம்ஃப் மோசடி மற்றும் வெளிநாட்டு நாணய வர்த்தகங்கள் போன்ற முக்கியப் பிரச்சினைகள், நாடாளுமன்றத்திற்குக் கொண்டுவரப்பட்டு, அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி பிரதிநிதிகளால் விவாதிக்கப்பட்டன.
நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படாமல், எந்தவொரு பிரச்சனைக்குரிய விஷயத்தையும் டாக்டர் மகாதீர், இரகசியக் காப்புச் சட்டத்தின் (ஓ.எஸ்.ஏ.) கீழ் வகைபடுத்தியது இல்லை.
“டாக்டர் மகாதிரைப் பற்றி எது வேண்டுமானாலும் சொல்லலாம், ஆனால், அவர் அப்படி செய்ததில்லை. ஆனால் இப்போது, தேசியத் தலைமை கணக்காய்வாளரின் அறிக்கை இரகசியக் காப்புச் சட்டத்தின் கீழ் உள்ளது,” என்று அவர் கூறினார்.
மார்ச் 2016- ல், 1எம்டிபி இறுதி தணிக்கை அறிக்கை ஓ.எஸ்.ஏ. கீழ் வகைபடுத்தப்பட்ட நடவடிக்கையை ஜோஹரி குறிப்பிட்டார். 1எம்டிபி விவகாரம் தொடர்பாக, தேசியக் கணக்கு செயலவை (பிஏசி) உறுப்பினர்களில் ஒருவரான டோனி புவா, தணிக்கை அறிக்கையின் உள்ளடக்கத்தை அறியவில்லை என்று கூறப்படுகிறது.
பல கேள்விகள் நிராகரிக்கப்படுகின்றன
நாடாளுமன்ற விவாதத்தின் போது, துல்லியமான பதில்களை வழங்குவது அல்லது 1எம்டிபி மற்றும் ஜிஎஸ்தி போன்ற விஷயங்களில் பதிலளிப்பதைத் தவிர்ப்பது போன்றவற்றால், அரசாங்கம் எதிர்க்கட்சி பிரதிநிதிகளின் விமர்சனங்களுக்கு ஆளாகிறது.
செப்பாங் நாடாளுமன்ற உறுப்பினர், முகமட் ஹனீப்பா மைடின், தனது கேள்விகள் எத்தனை முறை பதிலளிக்கப்படாமல் நிராகரிக்கப்பட்டன என்பது மறந்து போய்விட்டது என்று கூறினார்.
“உதாரணத்திற்கு, கடைசி நாடாளுமன்றக் கூட்டத்தில், 1எம்டிபி பணம் சம்பந்தப்பட்ட , பிரதமரின் வங்கிக் கணக்கு எண்ணை உறுதி செய்யும்படி கேட்டுக் கொண்டேன், ஆனால் அதற்கு பதில் இல்லை,” என்றார் அவர்.
மற்ற வகையான கேள்விகளுக்குப் புள்ளிவிவரப்படி பதிலளிக்கப்பட்டது என்றார்.
“தெரு விளக்குகள், சாலை நெரிசல், வடிக்கால் அடைப்பு போன்ற கேள்விகள், புள்ளிவிவரப்படி பதில் அளிக்கப்பட்டுள்ளன,” என்றார்.
இதற்கிடையில், முன்னாள் துணை அமைச்சர் இப்ராஹிம் அலி, தனது கேள்விகளுக்கு அரசாங்கத்திடம் எந்தப் பதிலும் இல்லை என்றார்.
எனினும், “நாடாளுமன்ற விவாத அமர்வில், கூட்ட விதிமுறைகள் மிகவும் இறுக்கமாக இருப்பதால், சபா நாயகர் உறுதியுடன் செயல்பட வேண்டும். நாடாளுமன்ற கூட்ட விதிமுறைகளில் சில தளர்வுகள் அவசியம்,” என்றும் அவர் கூறினார்.
ஆமாம் அன்வரை பிரதமனும் துணை பிரதமனும் போய் பார்த்ததின் காரணம்? என்ன நடக்கிறது? எலி ஏன் அம்மணமாக ஓடுகிறது?