நாட்டில் அரசியல் கட்சிகளுக்கு இடையேப் பரவிவரும் ‘சம உரிமை’ எனும் நோயை எதிர்ப்பதாகப் பெர்காசா கூறியுள்ளது.
அரசாங்கம் சமத்துவ உரிமைகளை வழங்கினால், அது மத்திய அரசியலமைப்பில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று அதன் தலைவர் இப்ராஹிம் அலி வருத்தம் தெரிவித்துள்ளார்.
“இஸ்லாம் மதத்திற்கு ஈடாக, மலேசியாவில் உள்ள மற்ற மதங்களின் தரத்தை உயர்த்துவதை நாங்கள் விரும்பவில்லை. பூமிபுத்ராக்களுக்கு நிகராக, அடிப்படை சமூக பொருளாதாரத்தை, குடியேறியவர்களுக்கும் கொடுப்பதை எங்களால் ஏற்றுகொள்ள முடியாது,” என்றார் அவர்.
தாமான் தாசேக் தித்திவாங்சா அரங்கில் நடந்த, பெர்காசாவின் 8-வது வருடாந்த பொது மாநாட்டில் உரையாற்றிய போது, “அவர்கள் அதனை நடைமுறைபடுத்தும் முன், என் பிணத்தைத் தாண்டி சென்று, சமநிலையை ஏற்றுக்கொள்ளட்டும்,” என அவர் பேசினார்.
அவர், மலாய் மொழிக்கான 152-வது பிரிவு மற்றும் பூமிபுத்ராக்களின் சிறப்பு உரிமைகள் தொடர்பான 153-வது பிரிவு பற்றியும் குறிப்பிட்டார்.
இனவாதப் போராளிகள், ஜனநாயகத்தைத் தவறாகப் பயன்படுத்தி, பூமிபுத்ராக்களுக்கும் பூமிபுத்ரா அல்லாதவர்களுக்கும் இடையே வெறுப்புணர்வைத் தூண்டிவிட வேண்டாம் என பெர்காசா கேட்டுக்கொள்வதாக அவர் தெரிவித்தார்.
“மலேசியாவையும் பூமிபுத்ராக்களையும் அழித்துவிடாதீர்கள், பேரினவாத அரசியலுக்கு இந்நாட்டில் இடமில்லை,” என்றும் அவர் கூறினார்.
எப்போது பிணமாவீர்கள் என்பதையும் சொல்லிவிடுங்கள்! அதன் பிறகு உங்களின் சம உரிமை பற்றிப் பேசலாம்!
இவனைப்போன்ற கம்மனாட்டிகளுக்கு நீதி நியாயம் அத்துடன் சரித்திரம் ஒன்றுமே தெரியாது— இப்படி சுதந்திரத்திற்கு முன் பேசி இருக்க வேண்டும்- நாதாரிகள்– அப்போது ஒரு பேச்சு இப்போது ? அரை வேக்காடு கம்மனாட்டி– ராஜ ராஜ சோழன் இங்கு ஆட்சி அமைத்திருக்க வேண்டும். நம்மவர்கள் வரம் காலத்தை பற்றி சிந்திப்பது இல்லை–MIC யின் நடவடிக்கைகள் கண்கூடு.
இப்ராகிம் போன்ற தீவிரவாத சிந்தனையுடைய பேர்வளிகளை சிறையில் வைப்பதுதான் அரசுக்கு நல்லது இல்லையென்றால் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தி இன ஒற்றுமையை சீர்ழித்துக்கொண்டிருப்பார்கள்…
சூரியனை பார்த்து நாய் குறைப்பதை நிறுத்த முடியாது என்பார்கள் ! இவனை போன்ற ஈன ஜென்மங்களின் வெட்டி பேச்சை பெரிதுபடுத்தாமல் இவனையெல்லாம் எட்டி உதைத்து வீரநடை போடுவோம் ! அவன் சமுதாயத்தில் பிழைப்புக்காக வீரவசனம் பேசி வயிட்ரய் கழுவும் ஈன பிறவி !
ஐயா s .maniam அவர்களே நீங்கள் கூறுவது உண்மை–ஆனாலும் அந்த ஈன ஜென்மத்துக்கு ஆதரவு இல்லை என்றாநினைக்கிறீர்கள்? பின்புறம் பல விஷயங்கள் நடக்கின்றன. இல்லாவிடில் நாம் இவ்வளவு ஓரம் கட்ட பட்டிருப்போமா?
பெர்காசா இப்ராஹிம் அலி பேச்சை கேட்டு எரிச்சல் அடைகிறோம் !
இதே பேச்சை தமிழ் நாட்டில் சீமான் பேசும் போது மகிழ்ச்சி அடைகிறோம் ! அது சரி என்றால் ! இதுவும் சரிதான் !
ஆனால் எனக்கு இரண்டுமே தப்புத்தான் !
பெர்காசா அலி நன்றாகத் தின்று ஏப்பம் விட்டுப் பேசுகிறார். அங்கு தமிழன் அரசாங்கம் கொடுக்கும் அரிசிக்கு வரிசையில் நிற்கிறான். இங்கு வலுக்கட்டாயமாக மற்ற இனத்தவர் உரிமைகளை அபகரித்துக் கொண்டார்கள். அங்கு அனைத்து தமிழனின் உரிமைகளையும் திராவிடர் கூட்டம் அபகரித்துக் கொண்டது. நாங்கள் மகிழ்ச்சி அடைவதில் என்ன இருக்கிறது? இன்னும் இழந்து கொண்டே தான் இருக்கிறோம். மகிழ்ச்சி அடையும் நாள் வரும் என எதிர்பார்க்கிறோம்.