அடுத்த பொதுத் தேர்தலின் முடிவை நிர்ணயிக்கும் சாவியாக சிறுபான்மையினரான இந்தியர்களின் வாக்குகள் மீண்டும் முக்கியத்துவம் பெறுகிறது என்று பக்கத்தான் ஹரப்பானின் உதவித் தலைவர் மு. குலசேகரன் கூறுகிறார்.
சீனர்களின் வாக்குகளை திரட்டுவது அவரின் தகுதிக்கு அப்பாற்பட்டதாகி விட்டதாக பிரதமர் நஜிப் கருதுகிறார் என்று நேற்றிரவு நெகிரி செம்பிலான் டிஎபி தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பில் பேசிய குலா கூறினார்.
13 ஆவது பொதுத் தேர்தலில் சீனர்கள் மிகப் பெரிய அளவில் எதிரணிக்கு வாக்களித்தனர்.
“எதிர்வரும் 14 ஆவது பொதுத் தேர்தலுக்கு நஜிப் இந்தியர்களின் மீது கவனம் செலுத்துகிறார். இனிப்புகளைக் கொடுத்து இந்தியர்களை மயக்கிவிடலாம் என்று அவர் நம்புகிறார்
“நஜிப் இந்தியர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை அவர் எப்படி நிறைவேற்றினார் என்பது பற்றி ஹிண்ட்ராப் தலைவர் பி. வேதமூர்த்தியிடம் கேளுங்கள்”, என்று சுமார் 500 இந்தியர்கள் பங்கேற்ற அந்நிகழ்ச்சியில் குலா கூறினார்.
14 ஆவது பொதுத் தேர்தலில் சிறுபான்மையினரின் வாக்குகள் எவ்வளவு முக்கியமனாது என்பதை ஹரப்பான் தலைவர் மகாதி முகமட் அக்கூட்டணியின் தலைமைத்துவை மன்றக் கூட்டங்களில் விடாப்பிடியாக வலியுறுத்தி வருவதாக குலா தெரிவித்தார்.
61 நாடாளுமன்ற இருக்கைகளின் முடிவை இந்திய வாக்குகள் தீர்மானிக்கும்; சீனர்களின் வாக்குகள் கிடைக்காது மற்றும் மலாய்க்காரர்களின் வாக்குகள் பல கட்சிகளுக்கிடையில் சிதறிவிடும்.
“ஆகவே, நீங்கள்தான் 14 ஆவது பொதுத் தேர்தலின் முடிவைத் தீர்மானிக்கப் போகிறவர்கள்”, என்று தீபாவளி விருந்தினர்களின் மகிழ்ச்சி ஆரவாரத்திற்கிடையில் டிஎபி ஈப்போ பாரட் நாடாளுமன்ற உறுப்பினர் முழங்கினார்.
மகாதிர் என்ன செய்தார், மஇகா கேள்வி
22 வருடங்கள் பிரதமராக இருந்த காலத்தில் மகாதிர் இந்தியர்கள் மீது அக்கறை காட்டியதே இல்லை என்று மஇகா கூறிவருவதைச் சுட்டிக் காட்டிய குலா, இது உண்மையல்ல என்றார்.
மகாதிர் இந்தியர்களுக்கு மஇகா மூலமாக அளித்த “இனிப்புகளை” குலா விவரித்தார்.
“1980களில் அவர் 10 மில்லியன் டெலிகோம் மலேசியா பங்குகளை மைக்கா ஹோல்டிங்ஸிற்கு கொடுத்தார் மற்றும் கெடாவில் எம்ஸ்ட் கட்டப்பட்டிருக்கும் நிலத்தை அவர் ஒதுக்கிக் கொடுத்தார்”, என்று குலா தெரிவித்தார்.
1990களில், அப்போது ஏழை இந்தியர்கள் என்று கூறப்பட்டவர்களிடமிருந்து ரிம100 மில்லியனை தொடக்க முதலீடாக திரட்டிய பின்னர் மைக்கா ஹோல்டிங்ஸ் நொடித்துப் போய்விட்டது.
எம்ஸ்ட் பல்கலைக்கழகம் 2001 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. அது மஇகாவின் அன்றையத் தலைவர் ச. சாமிவேலுவின் சாதனை என்று கூறப்படுகிறது. குலா இவ்விரு திட்டங்களையும் இகழ்ந்துரைக்கவில்லை. மாறாக, இவ்விரு செயல்திட்டங்களும் மகாதிர் பிரதமராக இருந்த காலத்தில் அவரிடமிருந்து பெற்ற உதவிகளைச் சுட்டிக் காட்டினார்.
“மைக்காவிற்கு மகாதிர் கொடுத்த 10 மில்லியன் பங்குகளின் மதிப்பு ரிம100 மில்லியன், ஆனால் அது என்னவாயிற்று”, என்று அவர் வினவினார்.
“மகாதிரை நம்பாதீர்கள் என்று மஇகா கூறுகிறது. ஆனால் மஇகாவை நம்பாதீர்கள் மற்றும் நஜிப்பை நம்பாதீர்கள் என்று நான் கூறுகிறேன். என் கருத்துடன் ஒத்துப் போகிறாரா இல்லையா என்று வேதமூர்த்தியைக் கேளுங்கள்”, என்று குலா கூறினார்.
இப்படியே சொல்லி தமிழருக்கும் ஜனநாயக கட்சியில் இடமில்லாமல் ஆக்கி விட்டனர். இனி அந்த கட்சிக்கு ஓட்டுப் போட்டு சீனர்களை உயரவைப்பதுதான் இந்தியர்களின் கடமையென்று சொல்லுகின்றார் மான்புமிகு! அடுத்தவன் உயர்வுக்காக வாழ்வோர் தமிழரே.
அரசாங்கம் நம் இந்தியர்களை நமது நாட்டின் மூன்றாவது பெரிய இனம் என்று அங்கீகரித்திருக்கும் போது ! ஏன்டா இன்னும் நம்மை சிறுபான்மையினர் என்று சிறுமை படுத்தி கொண்டு இருக்கிறீர் ! நமது நாட்டில் வங்காள தேசி நம்மை விட அதிகரித்து விட்டான் என்று அரசாங்கத்தின் புள்ளி விவரம் சொல்கிறதா ! ஏன் நம்மை நாமே இழிவு படுத்தி கொள்ள வேண்டும் ! நமது சலுகை களை இழக்க நமே வழி வகுத்து கொண்டிருக்கிறோம் ! 22 ஆண்டுகள் ஆட்சியில் இந்தியர்களின் வாய்ப்புகளையும் ! முன்னேற்றதையும் குழி தோண்டி புததைத்தவன் இந்த இந்திய வம்சாவளி இனத்துரோகி மகாதீர் ! இன்று அவன் உனக்கு வழிகாட்டியாகி விட்டானா ? டெலிகொம் பங்கும் ! எய்ம்ஸ் பல்கலை கழக அனுமதியும் நிலமும் ! தீபாவளி தோறும் தானை தலைவன் ! இவனுக்கு ஊட்டி விட்ட கேக்கிற்கு தானை தலைவனுக்கு கொடுத்த கூலி ! அடிவருடியாக இருந்து இந்தியசமுதாயத்தை குறிப்பாக தோட்ட புற தமிழனின் வாழ்வாதாரத்தை வேரறுத்து புத்ரா ஜெயா போன்ற மேம்படுகளுக்கு துணை புரிய தானை தலைவனுக்கு இந்த மகா தீரன் கொடுத்த அன்பளிப்பு ! இதனால் ஏழை தமிழன் எவனும் முன்னேறவில்லை ! இந்தியனின் பொருளாதாரத்தை உச்சத்தில் கொண்டு வைக்கிறேன் என்று வீரவசனம் பேசிய தானை தலைவனை நம்பி எல்மெட் அடி வாங்கியதுதான் மிச்சம் ! மைக்கா ஹோல்ட்டிங்ஸ் மோசடியை நீரும் பலமுறை முழங்கினீர் ! இன்று ! திக் ஸ்கின் ! முக்க தேபால் ! என்று சொல்வது உன்னை போன்ற அரசியல் வாதிகளுக்குத்தான் பொருந்தும் !மகாதீரையும் நம்ப முடியாது ! உன்னை போன்ற பச்சோந்திகளையும் நம்ப முடியாது ! நீயெல்லாம் சந்தர்ப்பவாதி என்பதை சொல்லாமல் தெரிந்து விட்டது !
நமக்கு ஓர் அரசியல்வாதியைப் பிடிக்கவில்லையென்றால் அவர்களை புறக்கணித்துவிட்டு, எந்த அரசியல்வாதி ஏற்புடையவர் என்று தோன்றுகிறதோ அவர்களுக்கு முழு ஆதரவையும் வழங்கிட வேண்டும். அவர்களைப் பற்றியே அதிகம் பேசவேண்டும், எழுத வேண்டும். நமக்கு பிடிக்காதவர்களைப்பற்றி மேலும் மேலும் பேசுவது அவர்களை மீண்டும் வெற்றியடையச் செய்து நம்மை வேதனைப்படச்செய்திடும். “எதிர்ப்பது வலுக்கும்” என்பது உண்மை, இந்த உண்மை உணர்ந்த சீனர்கள் தாங்கள் எதிர்ப்பவர்களைப்பற்றி அதிகம் பிரசங்கம் செய்வதில்லை. அமைதியாகவே தங்கள் தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதில் அவர்கள் வல்லவர்கள். நம்மவர்களுக்கு புலம்புவதைத் தவிர வேறொன்றும் தோன்றுவதில்லை, தானையை கரித்துக்கொட்டி கொட்டி துன் ஆக்கிவிட்டார்கள், மகாதீருக்கு சாபம் விட்டே மீண்டும் நம்மை ஆள்வதற்கு அரசியலுக்கு அழைத்துவந்துவிட்டனர், நம்பிக்கை நாயகனுக்கு எதிர்ப்பு மழை பொழிந்து மீண்டும் அரசு கட்டிலில் அமர்த்திவிடுவார்கள் போலும். திருந்துவோம், நமது எதிர்காலத்தை திருத்திக்கொள்வோம், நாம் எதிர்கொள்ளும் அரசியல் அவலங்களிலிருந்து நமது இளவல்களை காப்போம். வாழ்க
எந்த ஒரு அரசியல் கட்சியும் நம் சமுதாயத்ததின் உயர்விற்கு முழு அளவில் உதவ முடியாது .அவரவர் பதவிகளை தக்கவைத்துக்கொள்வதிலேயே நேரம் விரயம் ஆகிவிடும் .தலைவனுக்கு முக்கியத்துவம் கொடுக்காத சுயநலமற்ற சமுதாய அமைப்பு உருவாக வேண்டும் .அதில் நம்மில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் பங்களிக்க வேண்டும் .
ராமன் ஆண்டாளும் ராவணன் ஆண்டாளும் நமக்கு என்ன என்று இருப்போமா ! இவனையெல்லாம் ஆட்சியிலிருந்த போதும் எவனும் கேள்வி கேட்க்காததால் தான் இன்றும் மக்களை ஏய்ப்பதற்கு தயாராகின்றார்கள் ! ஒருவன் கொலை செய்யப்பட்டால் அவன் தலையெழுத்து சேத்தன் என்று விட்டு விடுவார்களா ! போஸ்ட் மொர்தேம் எதற்கு ! அதைப்போல் மைக்கா ஹோல்ட்டிங்ஸ் நொடித்து போனது ! அதை காரணம் காட்டி ஏழை தமிழன் சுரண்ட பட்டது இந்தியசமுதாயத்தின் தலையெழுத்து என்று விட்டு விடுவோம் ! தானையின் தளபதிகள் தலை நகரின் PWTC யில் தாக்கியது ! நாங்கள் ரத்தம் சிந்தியது எங்கள் தலையெழுத்து அப்படித்தானே ! உங்கள் குலசேகரனை எங்களுக்கு பிடிக்காது என்று இல்லை ! மைக்கா ஹோல்ட்டிங்ஸ் பட்றி கொக்கரித்தவர் ! ஆனால் மக்களுக்கு நீதி வழங்க படவில்லையே ! வெஸ்ட் போர்ட் ஜனலிங்கம் ஒரு வெள்ளி பங்கிற்கு எம்பது காசு வழங்கினார் ! அதையும் பல காரணங்கள் சொல்லி ! ஆவணங்கள் இல்லை என்று திருப்பி அனுப்பப்பட்டனர் ! பணம் திரட்டியவன் ம .இ .கா காரன் திருப்பி கொடுக்கும் போது எவனும் உதவ வில்லை ! பெட்டாலிங் ஜெயாவின் ஒரு மூலையில் எவனுக்கும் தெரியாத இடத்தில் ! அங்கு செக்யூரிட்டி கார்ட் வைத்ததுதான் சட்டம் ! அவர் சரி என்றால் மேலே அலுவலகத்துக்கு போகலாம் இல்லையென்றால் நடையை கட்டு ! இனி எதையும் கேட்க மாடோம் ! எழுதவும் மாடோம் ! சமுதாயமாவது ! மண்ணாங் கட்டி !!