எதிர்கட்சி கூட்டணியான ஹரப்பான் பதிவு செய்யப்படுவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தை வைத்து பாஸ் கட்சி மகாதிரை தாக்கியுள்ளது.
22 வருடங்களாக பிரதமராக இருந்த மகாதிருக்கு ஹரப்பானை பதிவு செய்வதில் எந்தப் பிரச்சனையும் இருந்திருக்கக்கூடாது என்று பாஸ் உதவித் தலைவர் முகமட் அமர் நிக் அப்துல்லா கூறினார்.
இன்று கிளந்தான் சட்டமன்றத்திற்கு வெளியில் பேசிய அவர், நாட்டை ஆள்வதற்கு ஹரப்பான் தகுதியற்றது என்பதை இது காட்டுகிறது என்றாரவர்.
ஹரப்பான் கட்சிகள் ஒதுங்கிக் கொண்டு பிஎன்னுடன் போரிட பாஸ் கட்சியை அவர்கள் அனுமதிக்க வேண்டும் என்று கிளந்தான் துணை மந்திரி பெசார் கூறினார்.
மகாதிருக்கு தமது சொந்தக் கட்சியை நிர்வகிக்க முடியாத போது, அவர் எப்படி நாட்டை நிர்வாகம் செய்யப் போகிறார் என்று கேட்ட துணை மந்திரி பெசார், பாஸ் மட்டும் பிஎன்னுடன் போராட விட்டுவிடுங்கள் என்றாரவர்.
ஹரப்பான் இன்னும் பதிவு செய்யப்படாமல் இருப்பதற்கு டிஎபி மற்றும் பெர்சத்து ஆகிய கட்சிகளின் உட்பிரச்சனைகள்தான் காரணம் என்று மன்றங்கள் பதிவகம் (ரோஸ்) கடந்த திங்கள்கிழமை ஹரப்பானுக்கு தெரிவித்திருந்தது.
அவர் ஏற்கனவே பல ஆண்டுகள் மக்கள் ஆதரவோடு நாட்டை ஆண்டவர்!!
டேய் வெங்காயம் – ஆட்சியுமாதிகாரமும் யாருடைய கையில்? அதிகாரம் விளையாடுகிறது. இது கூடவா உனக்கு புரிய வில்லை ? இல்லை தெரிந்தும் தெரியாமல் இருக்கிறாயா?