வருகின்ற 25.11.2017-இல் நடைபெறவுள்ள 350 கிலோ மீட்டர் பெருநடை ஜோகூர் பாருவில் உள்ள துன் அமினா பள்ளியின் அருகாமையில் இருந்து தொடங்கவுள்ளதாக அதன் ஏற்பாட்டாளர்கள் அறிவித்திருந்தனர். இருமொழி திட்டத்தை அகற்ற கோரி இந்த ஆட்சேப பயணத்தை மே 19 இயக்கத்தின் தியாகு மேற்கொள்கிறார்.
இது சார்பாக துன் அமினா பள்ளிக்கும், அமைதிப் பேரணி சட்டத்தின் கீழ் காவல் துறைக்கும் தகவல் பரிமாறப்பட்டது. காவல் துறை ஒப்புதல் வழங்க, துன் அமினா பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர், இராஜு என்பவர் காவல் துறையில் புகார் ஒன்றை செய்துள்ளதாக இதன் ஒருங்கிணைப்பாளர் பாலமுரளி தெரிவித்தார்.
அந்த புகாரில், தங்களது பள்ளி இந்த ஆட்சேப பெருநடையில் சம்பந்தப்படவில்லை என்றும் அந்த நிகழ்வு சார்பாக தாங்கள் பொறுப்பேற்க இயலாது என்றும் கூறப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது. இது சிறுபிள்ளைத்தனமானது என்கிறார் இது சார்பாக கருதுரைத்த மே 19 இயக்கதின் சிவா என்பவர்.
தமிழ்ப்பள்ளியின் நிலைத்தன்மையையும் தமிழ்க்கல்வியின் முக்கியத்துவத்தையும் கருத்தில் கொண்டு, இந்த இருமொழி திட்டம் தமிழ்ப்பள்ளிகளுக்கு உகந்தது அல்ல. மாறாக, முதலில் ஆங்கிலத்தின் புலமையை ஆங்கில மொழியின் வழி கற்பதே சிறந்தது. ஆங்கில மொழியை அறிவியல் கணிதம் வழி கற்பிக்க முயலுவது தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு உகந்தது அல்ல என்பது மே 19 இயக்கத்தினரின் வாதமாகும்.
இதற்கு சான்றாக பல நிலைகளிலும் அனைத்துலக அளவிலும் நடத்தப்பட்டுள்ள ஆய்வுகளை முன்வைக்கும் இவர்கள், இந்த இருமொழி திட்டம் தமிழ்ப்பள்ளிகளின் கட்டமைப்பையும் பாதிக்கும் என்கிறார்கள்.
இந்தச் சூழலில்தான் தியாகுவின் இந்தப் பெருநடை. தமிழ்ப்பள்ளியை காப்போம், தமிழ்பள்ளியை மீட்போம் என்கிறார், ஆழமான தமிழுணர்வை பெற்றுள்ள இந்த ஏழ்மையில் பிறந்த பட்டத்தாரி இளைஞர். விவேகானந்த தமிழ்ப்பள்ளியில் பயின்று UPSR தேர்வில் ‘7 ஏ’ பெற்ற இவர் ஒரு மருந்தியல் பட்டத்தாரியாவர்.
“எமது போரட்டம் தமிழ்ப்பள்ளிகளை காப்பாற்ற, இதில் மாற்றுக் கருத்து இல்லை”, என்கிறார். துன் அமினா பள்ளியின் சார்பாக போடப்பட்ட போலிஸ் புகார் பற்றி கேட்ட போது, “தமிழ்க்கல்விகாக, மொழிக்காக, தமிழர்களுக்காக, எதிர்காலத்தில் தமிழினம் வாழ வேண்டும் என்பதற்காக, வள்ளுவனுக்காக, இப்படி என்னால் எவ்வளவோ சொல்ல முடியும், இவற்றுக்கெல்லாம் உயிர் கொடுக்கும் ஓர் எளிய பங்களிப்புதான் என்னுடையது. அதற்கு ஆதரவு தாருங்கள்”, என்கிறார் தியாகு.
ஒரே காமிடியப்பா காமிடி ! ஏன் இந்த திகதி ? அடுத்தவரின் போராட்டத்தை திருடி கொள்ளவா ? உதயகுமாரின் செல்வாக்கை வேதமூர்த்தி திருடி கொள்வது போல் இருக்கிறது ! மேலும் எல்லாம் முடிந்து விட்ட்து ! 888 தமிழ் பள்ளி 425 ஆக்கு ஆக்குனு அக்கியாச்சி .. அப்போ வெறும் 10 லட்சம் தமிழர்கள் , ஆனா இப்ப 25 -30 லட்சம் தமிழர்கள். எல்லாம் முடிந்த பின்பு சூரிய நமஸ்காரம் எதற்கு ? இந்த போராட்டத்தை யார் மதிப்பா ? வெறும் 15 லட்சம் இந்தியர்களின் ஓட்டுக்காக அரசாங்கம் ஒரு ஆணியும் புடுங்காது ! வேணும்னா அப்படியே நேர நடந்து பர்மா வழியா இந்தியாவுக்கு போங்கனு ஆலோசனை சொல்லும் மா இ கா ! மத்தபடி ஒன்னும் மாறாது , காரணம் காலம் முடிந்து விட்ட்து !
திலீப் அவர்களே, 25.11.2017 திகதி தேர்வுக்கு ஹிண்ராப் போரட்டமும் ஒரு காரணம். அதன் எழுச்சிதான் போரட்ட உணர்வை நம்மிடம் விதைத்தது. அன்று நமக்கு ஒரு புத்துணர்வு கிடைத்தது. தமிழ்மொழி தமிழர்கள் உரிமையை காக்தான் இந்த 350 கிலோ மீட்டர் பெருநடை. அந்த உன்னத தினத்தில் இந்த போரட்டத்தை துவங்குவதில், இதில் ஈடுபடும் என்னை போன்றோர் பெருமிதம் அடைகிறோம். உங்களின் கருத்துக்கு நன்றி ஐயா,
வாழ்த்துக்கள் தியாகு அவர்களே, உங்களின் உணர்வு மிகவும் உணர்ச்சியுடன் உள்ளது. துன் அமினா பள்ளி குறைந்த பட்சம் உங்களுக்கு இடையூறு அளிகாதவாறு செயல் பட்டிடுந்தால் சிறப்பாக இருக்கும். அங்கு ஒரு தமிழ் உணர்வாலர் கூடவா இல்லை!
thakavalkal thanthaal waanum klanthu kolven. nadakkum paathaikalai kurupidunggal. I want to join, can explain the route! Go bro , best wishes, -anpudan palani
“தமிழ்க்கல்விகாக, மொழிக்காக, தமிழர்களுக்காக, எதிர்காலத்தில் தமிழினம் வாழ வேண்டும் என்பதற்காக, வள்ளுவனுக்காக, இப்படி என்னால் எவ்வளவோ சொல்ல முடியும், இவைகளுக்கெல்லாம் உயிர் கொடுக்கும் ஓர் எளிய பங்களிப்புதான் என்னுடையது. அதற்கு ஆதரவு தாருங்கள்” எங்களின் ஆதரவ்ய் கண்டிப்பாக உண்டு நணபா!
துன் அமினா தமிழ் பள்ளி தலைமை ஆசிரியர் வேறு இனமோ. தமிழ் தோல் போர்த்திய அந்நியன்.
மனியம் ஜோகூர் அவர்களே, நம்மவர்கள்தான் தடி எடுத்தவர் எல்லாம் தலைவர் ஆகிவிடுகிறோம் சார் ! எதற்கு சொல்கிறேன் என்றால், நாம் எவ்வளவுதான் உருண்டு புரண்டாலும், ஒரு நாட்டில் சிறுபான்மையினர் சட்டத்தால் மட்டுமே பாதுகாக்க முடியும் ! வரலாறு இதைத்தான் பறைசாற்றுகின்றது; அதை தவிர்த்து தலைவர்களால் அல்ல ! இதை உதயகுமார் அவர்கள் 18 கோரிக்கைகளாக முன்வைத்தார் ! அதில் 6 வது சரத்து என்ன கோருகிறது என்றால் , நம் இந்திய சமுதாயத்தை பாதுகாக்க , அவர்களின் மொழிகளை , கலாச்சாரங்களை பாதுகாக்க சட்டம் இயற்ற பட வேண்டும் என்று கோருகிறது ! 1970 களில் இஸ்லாமியர்களின் பள்ளிவாசல்கல் பாதுகாக்க சடடம் இயற்ற படடத்தே அப்படி ! எனவேதான் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் அன்வர் கூட பரிசலானை செய்ய முடியாமல் பின் வாங்கினார் ! வேறு 6 பொது கோரிக்கைகளை நிறைவேற்ற அன்வர் முன் வந்தாலும் , அவைகள் உரிமை சாரா அம்சங்கள் ! இங்கே தான் HINDRAF உதயகுமார் சமரசத்திற்கு இடமில்லை என்று பின் வாங்கினார். சந்தர்ப்பவாதி வேதமூர்த்தி பணத்தால் எல்லாவற்றயும் சரி செய்யலாம் என்று தப்பு கணக்கு போட்டு ,8 மாதம் அமைச்சராக இருந்தும் நாயைப்போல் ஏமாற்றப்பட்டு வெளியேற்றப்படடார் ! ஹிண்ட்ராப் பேரணி நடந்ததற்கு ஒரு காரணம் இருந்தது, ஒரு தேவையும் இருந்தது அன்று ! இப்பொழுது நமக்கு தேவை என்பது நடைப்பயணமோ போராடடமோ இல்லை ! மாறாக ஒரு தலைமை ! மாலுமி இல்லாத கப்பல் எங்கும் செல்லமுடியாமல் தத்தளித்து கொடுத்தான் இருக்கும் ! தத்தளிப்பதே போராடடம் என்று முடிவு செய்யலாகாது ! 30 . 11 . 2017 இந்த நெடு பயண போராட்டத்தை மறந்து , வேறு விஷயத்தில் மூழ்கி இருப்போம், காரணம் காலம் அப்படிதான் செல்கிறது ! எனவே எல்லோரும் அவர் அவருக்கு பிடித்த வழியில் போராடாமல் , HINDRAF உதயகுமார் வழியில் அரசியல் நகர்ச்சியை முன்னெடுத்தல் , வெட்ரி உண்டு ! இல்லையென்றால் மா இ கா போன்ற ஏமாற்று பேர்விழிகள் , மக்களை குழப்பி குழப்பி பதுங்குழிக்கு அனுப்பிவிடுவார்கள் !
மனமார்ந்த வாழ்த்துகள் எனது இனிய தோழர் தியாகு
தமிழுக்காக தம்பி தியாகுவின்
நடைப்பயணம் வெற்றிபெற
வாழ்த்துகிறேன்!
நன்றி டிலிப் அவர்களே! உங்களின் கருத்துக்களை கண்ணியமாக தெரிவித்தமைக்கு நன்றி. உதயகுமாருக்கு எங்களின் ஆதரவு என்றுமே உண்டு. அடுத்து அவரை ஒரு போரட்ட நிலைக்கு வர சொல்லுங்கள்! நமக்காக அதிக தியாகம் செய்தவர் அவர்.
இருப்பினும் தியாகு போன்ரவர்களின் அர்ப்பணிப்பும் ஆழமானது. அவருடன் பேசுங்கள் புரியும்.