காலிட் சாமாட் முறையான சான்றுகள் இல்லாமல் இஸ்லாத்தை போதித்தார் என்ற குற்றசாட்டில் அவர் குற்றவாளி என அளிக்கப்பட்ட தீர்ப்பை ஷா அலாம் ஷரியா உயர்நீதிமன்றம் இன்று நிலைநிறுத்தியது.
ஆனால், அவருக்கு விதிக்கப்பட்டிருந்த ரிம2,900 அபராதத்தை நீதிபதி ஷாலேஹான் யாத்திம் ரிம1,900 க்கு குறைத்தார்.
ரிம2,900 அபராதம் காலிட்டுக்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். அவர் நாடாளுமன்ற இருக்கையை இழப்பார். ஷா அலாம் மக்கள் அவர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியை இழக்க நேரிடும் என்று குறிப்பிட்ட நீதிபதி, இது காலிட் புரிந்த முதல் குற்றம் என்றும் கூறினார்.
இன்றைய இத்தீர்ப்புடன் காலிட் சாமாட் எதிர்வரும் 14 ஆவது பொதுத் தேர்தலில் போட்டியிட முடியும்.