2008-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில், அம்னோ மற்றும் பிஎன் தோல்வி அடைந்ததைப் பற்றி, முன்னாள் மந்திரி பெசார், முஹம்மது முஹம்மது தாயிப், இன்று கேள்வி எழுப்பினார்.
அம்மாநிலம் துறைமுகங்கள், விமான நிலையங்கள், புத்ராஜெயா மற்றும் எல்.ஆர்.டி. என, பிஎன் நிர்வாகத்தின் கீழ் பல்வேறு முன்னேற்றங்களைக் கண்டபோதிலும் எதனால் தோல்வியுற்றது என்று குழப்பமாக இருப்பதாக அவர் தெரிவித்திருந்தார்.
இன்றிரவு, மந்திரி பெசார் அஸ்மின் அலியின் அலுவலகம் அதற்கு பதில் அளித்தது.
முஹம்மதுவை “மறுசுழற்சி அரசியல்வாதி” என்று குறிப்பிட்டு, மந்திரி பெசார் அலுவலகத்தின் தகவல்தொடர்பு இயக்குனர், யின் ஷாவோ லோங் கூறுகையில், ஏற்கனவே அதற்கான பதில் பொதுவில் அறியப்பட்ட ஒன்றுதான் என்று கூறுகிறார்.
“மார்ச் 2008 வாக்கில், பல தசாப்தங்களாக ஊழல், வீண் செலவுகள், தவறான நிர்வாகம் ஆகியவற்றால் விரக்தியடைந்த சிலாங்கூர் வாக்காளர்கள், அம்னோவும் பி.என்.-உம் பொருத்தமற்றது என்பதை உணர்ந்தனர்,” என்று அவர் கூறினார்.
சிலாங்கூர் மக்கள் சாலை, உள்கட்டமைப்பு, நீர் வழங்கல் மற்றும் மின்சாரம் ஆகியவற்றைப் பற்றி நினைக்காமல் இல்லை என்றும் கூறினார்.
“இந்த அடிப்படை வசதிகள் கூட, அரசியல்வாதிகளின் உறவினர்களுடனான ஒரு ஒப்பந்தம் மூலமே தங்களை வந்துசேர்கின்றது என்பதை அறிந்து, அவர்கள் கவலை கொண்டனர்.
“இந்தத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்த அரசியல்வாதிகள், பணத்தைத் துணிபைகளில் வைத்துகொண்டு, நாட்டுக்கு வெளியேயும் உள்ளேயும் சுலபமாக வந்து போவதைக் கண்டு, அவர்கள் கவலை கொண்டனர்,” என்று அவர் கூறினார்.
1987-ஆம் ஆண்டில், சிங்கப்பூர், மலேசியா மற்றும் நியூசிலாந்து நாட்டு நாணயம், 1 மில்லியன் அமெரிக்க டாலரில் கொண்டுவந்ததற்காக, பிரிஸ்பேன் விமான நிலையத்தில் முஹம்மது கைது செய்யப்பட்டதைத் தெளிவாக குறிப்பிடுவதாக இக்கூற்று இருந்தது.
சிலாங்கோரில் பல தோட்டங்கள் மேம்பாட்டு திட்டங்கள் என்று ஏழை பாட்டாளி மக்கள் வீடிழந்து வேலை இழந்து வாழ்வாதாரம் இன்றி வீதியில் நின்றதிற்கும் தொற்று போன இந்த அரசியல் கச்சிதானே காரணம் ! அரசாங்கத்தின் பணம் ஆனால் ! எல்லா மேம்பாட்டு திட்டங்களும் ! “சத்து லாகி புரோஜெக் ஒலெஹ் பாரிசான் ” உடை பட்ட இந்து ஆலயங்கள் எத்துணை ! தெய்வம் நின்று கொன்றது ! சிலாங்கூர் மாநிலத்தில் ம .இ.கா. தானை தலைவனின் தளபதிகளும் ! ஜலான் மணியம் களும் பண்ணாத பந்தாவா ! சேடையா ! அடிக்காத கொள்ளையா ! பரலோகம் போய் விட்டார்கள் ! சமுதாய துரோகிகள் ! இன்னும் இருப்பவனும் மக்களுக்கு செய்த துரோகத்திற்கு கூலி கொடுத்து கொண்டு இருக்கிறான் !!
அதென்ன BN -ஆட்சியில் முன்னற்றம் கண்டது?மக்களின் வரிப்பணத்தை என்ன செய்ய வேண்டும்? உன் வங்கி கணக்கில் போட வேண்டுமா- நம்பிக்கை நாயகனைப்போல்? எவ்வளவோ செய்திருக்க வேண்டும் -பேருக்கு சிலவற்றை செய்து விட்டு பெரிய பேச்சு. உன்னைப்போல் தவளைகளுக்கு -நேரத்திற்கு நேரம் பேசவா தெரியாது? நீ அதிகாரத்தில் உட்கார்ந்து இருந்த போது எவ்வளவு கொள்ளை அடித்தாய்? அதே போல் தானே உனக்கு பின் வந்தவனும்? உன் மூளையை முட்டியிலா வைத்திருக்கிறாய்?