கெடா பாஸ் எதிரணித் தலைவர் கட்சி மாறினார்

 

பாஸ் கட்சியின் அனாக் புக்கிட் சட்டமன்ற உறுப்பினர் அமிருடின் ஹம்சா, இவர் கெடா எதிரணித் தலைவர்கும் கூட, பெர்சத்துக்கு மாறிவிட்டார்.

அமிருடின் பெர்சத்துக்கு மாறியது ஒரு செய்தியாளர் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. அது முகநூலிலும் நேரடியாகப் பதிவு செய்யப்பட்டது.

பெர்சத்துவின் துணைத் தலைவர் முக்ரீஸ் மகாதிர், இவர் கெடா பெர்சத்துவின் தலைவருமாவார், இந்தச் செய்தியாளர் கூட்டத்தில் கலந்து கொண்டார். அவருடன் மாநிலத்தின் இதர தலைவர்களும் உடனிருந்தனர்.

முன்னதாக, பாஸ் தலைவர்கள் அமிருடினை பாஸிருந்து பிரிந்து சென்ற பார்டி அமனாவின் அனுதாபி என்று கூறியிருந்தனர்.

கடந்த மாதம் அமனா அதன் ஆண்டுப் பொதுக்கூட்டத்தை கெடாவில் நடத்தியது. அக்கூட்டத்தில் அமிருடின் இருந்தார்.