ஹிண்ட்ராப் தலைவர் பொ.வேதமூர்த்தி, இந்தியச் சமூகத்திற்காக மஇகா எதையும் செய்யவில்லை என்று கூறியதை அக்கட்சியின் துணைத் தலைவர் எஸ்.கே.தேவமணி கடுமையாக சாடினார்.
ஃப்.எம்.தி.-இடம் பேசிய தேவமணி, வேதாவின் குற்றச்சாட்டை மறுத்தார்.
“எனக்கு அவரைப் பற்றி தெரியும். தேர்தல் நெருங்கி வரும்போது, மக்களின் ஆதரவையும் அனுதாபத்தையும் பெற இது வழியல்ல.
“2007- ல், ஹிண்ட்ராப் நடத்திய பேரணி என் மனதைத் தொட்டது, நான் அவர்களை மதிக்கிறேன். ஹிண்ட்ராப் ஆர்ப்பாட்டத்தை நாங்கள் நன்றாக நிர்வகிக்கவில்லை என்பதை நாங்கள் ஒப்புக்கொண்டோம்.
பாரிசான் நேஷனல் (பிஎன்) அதற்கான விலையை, ஏற்கனவே கொடுத்துவிட்டது, அப்பேரணிக்குப் பிறகு நடந்த பொதுத் தேர்தலில், பிஎன் பல நாற்காலிகளை இழந்தது,” என்று தேவமணி கூறினார்.
பிஎன் மற்றும் மஇகா, இந்தியர்களை மேம்படுத்த மனப்பூர்வமாக சிந்தித்து, பல செயல்திட்டங்களைச் செய்துவருகிறது என்றார் அவர்.
“வேலைவாய்ப்பு, கல்வி, வறுமை மற்றும் பல பிரச்சனைகளைக் கவனித்து, அவற்றின் சிக்கல்களை உடனடியாகத் தீர்ப்பதற்கு நாம் ஆவன செய்து வருகிறோம். 2008- ஆம் ஆண்டின் ஆரம்பத்தில், இந்தியச் சமூகத்திற்கான அமைச்சரவைக் குழு பிரதமரால் இவ்வாறு அமைக்கப்பட்டது.
“பிரதமர் தமிழ்ப்பள்ளி மேம்பாட்டுத் திட்டம் உட்பட, தொடர்ச்சியான பல திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளார்.
“பிரதமரின் அலுவலகத்திற்குள்ளேயே இன்னும் பல முயற்சிகள் வடிவமைக்கப்பட்டன. அமைச்சர்கள், மஇகா மற்றும் அனைத்து பிஎன் அங்கத்துவக் கட்சிகளின் உதவியுடனும், மலேசிய இந்தியர்கள் தொடர்பான அனைத்து விஷயங்களையும் மேற்பார்வை செய்ய, அங்கு சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.
“இந்த ஆண்டு, இந்திய சமூகத்திற்காக, இரண்டு வருட ஆராய்ச்சி மற்றும் கருத்துப் பரிமாற்றத்திற்குப் பின், மலேசிய இந்திய புளூபிரிண்ட்டை பிரதமர் அறிமுகம் செய்தார்,” என்று அவர் கூறினார்.
நாட்டில், இந்தியர்களின் கீழ்த்தரமான நிலைமைக்கு மஇகாவைக் குற்றம் சாட்டியதோடு, பிஎன்-க்கு “ஒரு பாடம் கற்றுக் கொடுக்கவேண்டும்” என்று கூறிய வேதாவின் கருத்துக்களுக்கு தேவமணி இவ்வாறு பதிலளித்தார்.
மஇகா இந்திய சமூகத்தின் பிரதிநிதியாக இருப்பதை முற்றிலும் அழிக்க, ஹிண்ட்ராப் பாடுபடும் என்றும் வேதமூர்த்தி கூறினார்.
ஹிண்ட்ராப்பின் ‘தேசிய முன்னணிக்குப் பூஜ்ஜியம் வாக்கு’ (ஷீரோ வோட் ஃபார் பிஎன்) பிரச்சாரத்தின் துவக்க விழாவில், கலந்து கொண்டு உரையாற்றியபோது, பி.என். ஆட்சியின் 50 ஆண்டுகளில், மஇகா இந்திய சமூகத்தை முற்றிலும் தோல்வியடைய செய்துவிட்டது என்று வேதா கூறினார்.
ஒரு வருடம் பிரதமர் அலுவலகத்தில் துணை அமைச்சராக இருந்த வேதாவுக்கு என்ன நடக்கிறது என்று தெரிந்திருக்கும்.
இந்திய சமூகத்திற்குப் பல விஷயங்களைச் செய்ய தற்போதைய அரசு முயன்று வருகிறது.
“நாம் என்ன செய்கிறோம் என்பதை வந்து பாருங்கள். இந்திய சமூகத்தின் நலனுக்காக, ஒன்றாக வளர உதவுங்கள்.
“நீங்கள் கோபமாக இருந்து, எங்களை நசுக்குவதற்காக போராட வேண்டாம். ஒரு கோபமான நபர் நீண்ட தூரம் செல்ல முடியாது, “என்றும் தேவமணி கூறினார்.
சும்மா வேதாவுக்கு மறுமொழி கூறி வேதாவை பெரிய மனிதனாக்கி விடவேண்டம்.
வேதா உண்மையை தானே கூறியுள்ளார். ம இ கா இந்தியர்களை மறந்து பல காலம் ஆகி விட்டது.
இந்தியர்களுக்கு ம இ கா ஒன்றும் செய்ய வில்லை என்பது உண்மையே. 1957 க்கும் 2017 க்கும் ஒப்பிட்டு பார்த்தால் நாம் எவ்வளவு முன்னேறி இருக்கிறோம்? மலாய்க்காரன் எவ்வளவுக்கு அள்ளி அள்ளி ஊட்டப்பட்டிருக்கிறான்? அப்போது எப்படி இருந்தவன் இன்றைக்கு எப்படி இருக்கிறான்? நம்மவர்கள் நாடற்றவர்கள் ஆனதே மிச்சம். தனக்கு கிடைக்கும் எலும்பு துண்டுக்காக தேவமணி பேசித்தானே ஆகவேண்டும். ம இ கா ஆசாமிகள் செம்பருத்தி படிப்பார்களா?
சும்மா சிங்கப்பூரில் உட்கார்ந்து கொண்டு ம.இ.க. ஒன்றும் செய்யவில்லை, ஒன்றும் செய்யவில்லையென்று சொல்வது எப்படி சரியாகும்.
ம.இ.க. அதன் தலைவர்களுக்கும் குட்டித் தலைவர்களுக்கும் செய்த அரசியல் தொண்டு இந்தியர்களுக்குத்தானே? அவர்களும் இந்தியர்தானே. ம.இ.க. உறுப்பினர்க்கள் இந்தியர்தானே? உங்களுக்கு உதவி வேனுமுன்னா ம.இ.க. – வில் உறுப்பினராகச் சேர்ந்து நன்மை பெறுங்களேன்!
ம.இ.க. கட்சியில் சேரமாட்டேன். ம.இ.க. உறுப்பினர் தேர்தலில் நின்றால் ஓட்டுப் போட மாட்டேன். ஆனால் இப்பேர்பட்ட இந்தியருக்கு ம.இ.க. எல்லாம் செய்ய வேண்டும்? என்ன நியாயம் பேசுகின்றீர்.. ஜ.செ.க. இந்தியர் வளர்சிக்கு அப்படியென்ன செய்து விட்டது? மக்கள் நீதிக்கட்சி இந்தியர்களுக்கு அப்படியென்ன்ன செய்து விட்டது? அப்புறம் அந்த கட்சிகளுக்கெல்லாம் ஓட்டு போட வேண்டுமென்பது இந்தியரின் வேண்டுதலையா?
இந்த ம.இ.க. காரனுங்க உண்மையைக் கூட எடுத்துப் பேச தெரியாத அப்பாவிகளாக இருகின்றதைப் பார்க்கும் பொழுது இவனுங்களுக்கு கட்சி எதற்குன்னு கேள்வி கேட்க வேண்டியுள்ளது.
எந்த உண்மையைக் கூறினார்? உண்ணாவிரதமென்று நாடகமாடி துணையமைச்சர் பதவி பெற்றது உண்மை. இங்கிலாந்திலிருந்து மலேசியாவிற்கு வருமுன்பே ஆளுங்கட்சியிடம் பேரம் பேசி ஜோகூர் வழியாக காவல்துறை ஆதரவுடன் நுளைந்தது உண்மை. அதன்பின் வந்த தேர்தலில் பக்காதானுடன் கூட்டுரவு வைக்கக்கூட்டது என்பதற்காக அர்த்தமில்லாமல் அதிகமானத் தொகுதிகளில் போட்டியிடக் கேட்டது உண்மை. அப்புறம் பக்காத்தான் எங்களை கை விட்டு விட்டது என்று நாடகமாடி தே.மு. யுடன் கைகோர்த்து உடன்படிக்கை செய்தது உண்மை. அந்த உடன்படிக்கை சட்டப்படி செல்லுமென்று கூறியது உண்மை. எவ்வளவு உண்மையை நம்மிடம் கூறியுள்ளார் பாருங்கள்!
ஐயா தேவமணி அவர்களே உங்கள் கட்சி மா.இ.கா இத்தனை வருடம் மக்களுக்கு செய்த சேவைகள் படியிலிட முடியுமா. ஓகே சரி விஷயத்திதிற்கு வருவோம். இப்போ மக்கள் உங்கள் கட்சிகாரர்கள் வந்தால் ஏன் விரட்டுகிறார்கள். உங்கள் சேவைகள் சொன்னால் மக்கள் அதிகமாக கோபம் கொள்கிறார்கள் எதற்க்காக. எதற்கெடுத்தாலும் பிரதமர், பிரதமர் என்றுதான் சொல்கிரிர்களே தவிர நான், நாங்கள், கட்சி ஏன் சொல்லவில்லை. ஏன் உங்களுக்கு துணிவு இல்லையா மக்களிடம் சொல்வதற்கு. அன்று 2007 ஹிண்ட்ராப் நடத்திய போராடம் பிறகுதான் மக்கள் ஒரு விழிப்புணர்வுக்கு வந்தார்கள். இனி மா.இ.கா என்ற கட்சி தேவையில்லை என்று மக்கள் மனதில் பதிந்து விட்டது. முகம் சுளிக்காமல் வெட்கம் இல்லாமல் நீங்கள் பேசும் பேச்சுக்கள் இனி மக்களிடம் எடுபடாது. பிரதமர் கொடுக்கும் நிதியுதவி கணக்கை முறையாக காட்டுங்கள். அது போதும். உங்களின் சுகதுக்காக ஏழை சமுதாயம் இன்றும் போராட வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள். படித்தவர்கள் ஒருநிலையில் நல்ல வாழ்கிறார்கள். படிக்காதவன் நிலை உங்களுக்கு புரியுமா. இன்று அதிகம் படிக்காதவன் தான் உங்களை தேடி வருகிறார்கள். அவர்களுக்கு என்ன உதவிகள் செய்கிறிர்கள். வேலை பிரச்சனை, வீடு பிரச்னை, இன்னும் எத்தனையோ. மக்களின் கோரிக்கைகள் நேரடியாக பிரதமர் அவர்களிடம் கொண்டு செல்லமுடியாது அனால் கட்சி காரர்கள் உங்கள் முலமாகதான் நாங்கள் கோரிக்கைகள் வைக்க முடியும். அப்படிகோரிக்கைகள் வைக்கும் பொழுது என்ன செய்திர்கள். மக்களின் சாபம் உங்களை உங்கள் கட்சி தலைவர்களையும் சும்மா விடாது. ஹிண்ட்ராப் அன்றும் இன்றும் இல்லை என்றால் தமிழ் இனமே என்ன என்று கேட்கும் நிலை வந்து இருக்கும். சுடுகாடு நிலம், தமிழ் பள்ளி நிலம், அரசாங்க மானியம், இன்னும் எத்தனையோ சொல்லலாம் வேண்டாம் என்று விடுகிறேன். வெட்கமாக உள்ளது. உங்களையும் உங்கள் தலைவர்களையும் இங்கே எழுதுவதற்கு. நன்றி
துன் சம்பந்தன் ஏதும் செய்யாமல் தான் ஒரு தலை நகரில் அவரின் பெயரில் ஒரு உயர்ந்த கட்டிடம் இருக்கிறதா !! டான்ஸ்ரீ மாணிக்கவாசகம் ஏதும் செய்யாமல் தான் அவரின் பெயரில் ம.இ கா .
கட்டிடம் இருக்கிறதா ! டேய் முட்டாள் ! இன்று நீ அடி வருடி கொண்டு இருக்கிறாயே அவனை கேள் எப்போது இந்த இந்திய சமுதாயம் நிலை குழைந்து போனது என்று !22 ஆண்டு கால ஆட்சியில் இந்த இந்திய சமுதாயத்தின் மேன்மையை சிறுமை படுத்தவேண்டும் என்று கங்கணம் கட்டி கொண்டு செயல் பட்டவன் இந்த மகா தீரன் ! அவனுடன் இந்திய சமுதாயத்தை சுரண்டியவன் தானை தலைவன் ! சரித்திரம் தெரியாமல் முட்டாள் தனமாக பேசாதே ! சுயநல பச்சோந்தி நீயெல்லாம் ! ம. இ. கா காரன் ஒன்றும் செய்யவில்லை என்று வைத்துக்கொள்வோம் ! அது உண்மையாக இருக்கட்டும் ! உன்னை நம்பி தெருவுக்கு வந்த மக்களுக்கு என்னத்தை கிழித்தாய் !! நீ கேட்ட அந்த தொகை கிடைக்கவில்லை என்றவுடன் பதவியை துறந்தாய் ! அழைப்பு வரும் என்று ஏமாந்து இன்று இன துரோகிகளுடன் சேர்ந்து கொண்டாய் ! உன்னை எல்லாம் நம்பி தெருவுக்கு வந்த எங்களை முதலில் செருப்பால் அடிக்க வேண்டும் !!
ஏன்டா மணி ! அவன் தான் பொழுது போக வேண்டும் அரசியலில் எவன் காலில் விழுந்து வைத்தை கழுவ வேண்டும் என்று முட்டாள் தனமாக பேசி கொண்டு இருக்கிறான் ! நீயும் அவனிடம் சரி சமமாக வம்புக்கு நிற்கிறாய் ! அரசியலுக்கு வந்தமா ! அடைக்கி வாசிச்சமா ! நாலு காசு செஞ்சமா ! ஆளுபவனுக்கு அடி வருடியாக இருந்தமா ! என்று மழுங்கையாக இருக்க வேண்டும் ! கோதாவில் இறங்க வேண்டியது தானே ! நமக்குள் அடித்துக்கொள்வது ஒன்றும் புதிதில்லையே ! உங்கள் தொண்டர் படையை இறக்கி விட வேண்டியது தானே !
ஐயா தவமணி அவர்களே , முதலில் மா இ கா வுக்கு எப்படி 1200 மில்லியன் வெள்ளி சொத்து வந்தது என்று சொல்லுங்கள் ! மா இ கா என்ன ஆட்டோ ஒட்டியதா ? மாடுகளை வைத்து பால் கறந்ததா ? அல்லது பாஷா வாக இருந்ததா ?உங்கள் மா இ கா செய்தது ஒரு இன அழிப்பிற்கு உதவியது ! மக்கள் பணத்தை திருடியது (TV3 , CIME DERBY , TELECOM share 150 மில்லியன் எப்படி மா இ கா சொத்து ஆனது ? 3 % இருந்த இந்தியர்களின் சொத்தை, ௦.01 % எப்படி அரசாங்கம் குறைக்க சதி செய்ததோ அதற்கெல்லாம் துணை போனது நீங்கள் தானடா ? பத்து லட்சம் இந்திய மக்களுக்கு 888 தமிழ் பள்ளிகள் இருந்தது அன்று ! இன்று 25 லட்சம் இந்திய மக்களுக்கு வெறும் 425 தமிழ் பள்ளிகள் மட்டும் இருக்கிறது ! தமிழ் பள்ளிகளை மூடும் பொழுது, வாயில் என்ன வாழை பழம் சாப்பிட்டு கொண்டு இருந்தீர்களா தேவமணி அவர்களே ? 60 களில் இந்தியர்களுக்கு துணையாக இருந்த INDIAN OVERSEAS BANK எப்படி மூடப்பட்ட்து ? ஏன் மா இ கா MiED கல்வி கடனுக்காக 6 % அநியாய வட்டி வாங்குகிறது ? 800 மருத்துவ மாணவர்கள் CSMU படித்து விட்டு படடதாரிகளாக வந்த பொழுது ஏன் அங்கீகாரத்தை ரத்து செய்தது அரசாங்கம் ? அப்பொழுது நீங்கள் என்ன செம்மறி அடுக்கு பேன் பார்த்து கொண்டு இருந்தீர்களா ? மா இ கா வின் TAFE COLLEGE படித்த 2000 மாணவர்களின் டிப்ளமோ மற்றும் டிகிரி அரசாங்கத்தால் அங்கீகரிக்க பட வில்லை ! அதற்கு சமகால கல்வி அங்கீகாரம் வாங்கி கொடுத்தீர்களா ? என்னதான்டா செய்தீர்கள் ? பிறகு எதற்கு உங்களுக்கு dato படடம் ? வேத சில தவறுகள் செய்திருந்தாலும் , இன துரோகம் செய்ய வில்லை ! ஆனால் மா இ கா , இந்தியர்களுக்கு கொடுத்ததை புடுங்கி தின்றது ! தெரு நாய் போல !
ஐயா தேனீ அவர்களே– யாரை சிங்கப்பூரில் சும்மா உட்கார்ந்துகொண்டு ம இ கா ஒன்றும் செய்யவில்லை என்று சொல்வதாக கூறுகின்றீர்கள்? என்னைப்பற்றி எல்லாம் தெரிந்தவர் போல் பேசுகின்றீர்?. எனினும் நான் அதிகமாக ஒன்றும் கூற விரும்ப வில்லை. உங்களுக்கு ம இ கா அதிகம் சாதித்தாக எண்ணினால் எண்ணுங்கள். உண்மை நம்முடைய நிலைமையை கண்முன் பறை சாற்றிக்கொண்டிருக்கிறது. காலம் சொல்லும். சிங்கப்பூரை ஒப்பிட்டு கூறுவதானால் தவறு ஒன்றும் கிடையாது. தயவு செய்து dilip ன் கருத்தை படிக்கவும்.
ம..இ.கா. மூலமக நிதி திரட்டப்பட்டு வாங்கிய சொத்துகளை எல்லாம் சாமியிடமே கொடுத்து விட்டீர்கள் அதை கேட்க துப்பில்லை துப்பு கெட்டவர்களே….
ம.இ.க. தலைவரெல்லாம் உத்தம புத்திரர் என்று கூறவில்லை.
இதே துணைத்தலைவரும் சந்தர்ப்பவாதிதான்.
ஐயா தேவமணி
இந்திய சமுதாயத்துக்கு அதிலும் குறிப்பாக தமிழர்களுக்கு நீங்கள் (ம.இ.கா) ரொம்ப அதிகமாகவே செய்திருக்கிறீர்கள். ஆகக் கடைசியாக நீங்கள் செய்திருப்பது தமிழ்ப் பள்ளிக்கூடங்களுக்கு வைத்த சரியான ஆப்பு.
ரொம்ப அதிகமாக கூவ வேண்டாம். இந்த அறுபதாண்டுகளில் நீங்கள் என்ன செய்தீர்கள் என்று கேட்கவில்லை நாங்கள். ஆனால்
1. கடந்த ஐந்து ஆண்டுகளில் என்ன செய்தீர்கள்
எத்தனை ஏழை இந்திய மாணவர்களுக்கு உங்கள் (ம.இ.கா) செல்வாக்கின் மூலம் பல்கலைக்கழகங்களில் இடம் வாங்கிக் கொடுத்தீர்கள்?.
எத்தனை ஏழைக்குடும்பங்களுக்கு உதவினீர்கள்? 4. ம.இ.கா கலை கலாச்சரப் பிரிவு என்ன செய்தது? 5. ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் ம.இ.கா இளைஞர் பிரிவும் மகளிர் பிரிவும் கண் விழித்ததா?
ம.இ கா ‘தேர்தல் வேட்பாளர்கள்’ தங்கள் தொகுதிகளுக்கு எத்தனை முறை சென்றார்கள்?
மேலே நான் கேட்பதெல்லாம் கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் தான். முதலில் இந்த கேள்விகளுக்கு ம.இ.கா வோ அல்லது அவர்களுக்கு வக்காளத்து வாங்கும் அடிவருடிகளோ பதில் சொல்லலாம். மற்றவற்றை பிறகு விவாதிக்கலாம். நான் ரெடி நீங்க ரெடியா? டீல் ஓகேவா?
இந்திய சமுதாயத்திற்கு இழைக்க பட்ட துரோகத்தை பட்டியலிட்டிருக்கிறீர்கள் ! இதெல்லாம் அனைவருக்கும் தெரிந்தும் அவன் நட்டு கொண்டு வந்த மயிரை கூட புடுங்க முடியவில்லையே ! திடீர் திடீர் என்று தோன்றும் தலைவர்களும் வசூல் மன்னர்களாக ! நம்மிடம் புடுங்கி தின்பவர்களாக ! அரசாங்கத்தின் மானியத்திற்கு பிச்சை எடுப்பவர்களாக தானே இருக்கிறார்கள் ! ( சமீபத்தில் நடந்த இண்ராப் ஒன்று கூடலுக்கு rm 200 வசூல் ) எல்லாம் பணம் பண்ணும் பாசாங்கு தான் ! வேத , தானை தலைவனை எதிர்த்து ஒரு வார்த்தை பேசு பார்ப்போம் ! சுயநல வாதி ! சந்தர்ப்பவாதி ! அவர் கேட்ட அந்த தொகையை கொடுக்கிறேன் ! உமக்கு செனட்டர் கொடுத்து முழு அமைச்சர் ஆக்குகிறேன் என்று நஜிப் சொல்லட்டும் ! அடுத்த நிமிஷம் இந்திய சமுதாயத்தின் விடி வெள்ளி ! இந்த திடீர் தலைவன் அடிக்கும் பல்டியை பார்ப்போம் ! குரங்கு தோத்துவிடும் !!
33 petrol pum lesen vaithirukkiraan koothimani
தேனீ அவர்களே, உங்களை கண்டு சிரிப்பதா அல்லது அழுவதா என்று எனக்கு தெரிய வில்லை ! அரசியல் அமைப்பு சாசனத்தில் ஒரு இடத்தில கூட india அல்லது china என்ற வார்த்தை இல்லை என்று நான் புலம்பினாள் , எதிர்க்கட்சியை காட்டிலும் மா இ காவே சிறந்தது என்பீர்கள் நீங்கள் . இது எதை குறிக்கிறது என்றால் எப்பொழுதுமே பக்கத்துக்கு வீட்டுக்காரனின் துயரத்தில் நாம் சந்தோசம் கொள்வதாக பொருள் படும். இது எவ்விதத்திலும் நன்மை அளிக்காது ! தேனீ , உங்களிடம் நேரடியாக கேள்வி கேட்க்கிறேன் அதற்கு பதில் சொல்லுங்கள் ! மலேசியாவில் 99 ஆண்டு மட்டும்தான் குடியிருப்பு நிலம் செல்லுபடியாகும். பிறகு அது மாநில அரசாங்கத்தின் சொத்தாக மாற்றப்படும் ! அதன் உரிமையாளர் மன்னர் ஆவார் . உதாரணத்திற்கு : Putrajaya 200 மில்லியன் விலையில் Selangor மன்னரிடம் இருந்து , பெடரல் territory யாக வாங்க பட்டு விட்ட்து ! 99 வருடம் கழித்தும் , அது எந்த மன்னர்களுக்கும் சொந்தம் இல்லை ! இதன் அடிப்படையில் 100 வருடம் கழித்து, இந்தியர்களின் நிலை என்ன தேனீ அவர்களே ? நம்முடைய சொத்துடைமையைத்தான் சாமி வேலு என்ற திருடனும் , உங்களை போன்ற ஜாலராக்களும் உரிமையாக்கி கொண்டு விடடீர்களே ; பிறகு மக்கள் என்ன செய்வார்கள் ? இப்படி மக்களை ஏமாத்திரி சேர்த்த மா இ கா வின் சொத்து , 1200 மில்லியன் Malaysia வெள்ளி ! அதை பன் மடங்காக்கி , 99 வருஷத்தில் வெளிநாடுகளுக்கு எடுத்து சென்று விடுவீர்கள் ! மக்கள் ? நீங்கள் ஒன்று பொருளாதார மேதை அல்ல , சும்மா வாயாலே வடை சுட !
முதலில் சட்டத்தை நன்கு அறிந்து கொண்டு பேசுவது நல்லது.
99 வருட ‘Lease Grant’ அதன் குத்தகை காலம் முடிந்த பிறகு மாநிலத்திற்கு உரிமையாகும். அரசருக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. அதற்கு முன் உரிமையாளராக இருந்தவர் மீண்டும் அந்த நிலத்திற்கு விண்ணப்பிக்கும் பொழுது அரசாங்கம் அவர்களின் விண்ணப்பத்திற்கு முதல் உரிமை கொடுக்க வேண்டும். அந்த விண்ணப்பமும் குத்தகை முடிய 5 ஆண்டுகள் இருக்கும் போதே விண்ணப்பிக்கலாம். அந்த காலத்தில் எத்தகைய நிலத்து வரி வசூலிக்கப்படுகின்றதோ அதற்கான கட்டணத்தைக் கட்டி நிலத்தைப் பெறலாம். இது அனைத்துக் குடிமக்களுக்கும் பொதுவான விதி.
அரசாங்கத்தால் இந்தியர்களுக்கு ஒதுக்கப்பட்ட சலுகைகளை ம.இ.க. தலைவர்கள் அவர்தம் வாயில் வாக்கரிசியாகப் போட்டுக் கொண்டார்களெனில் அதன் தவறு யாருடையது?
இது முந்நாள் இந்நாள் தலைவர்களின் ஒட்டுமொத்தப் பொறுப்பு. தானைத் தலைவர் தவறு செய்ய ஒவ்வொரு தலைகளும் ஜால்ரா போட்டனர். இன்று கட்சி உடைந்ததும் இந்தியர் சொத்து போய் விட்டது என்று ஊளையிடுவதால் யாருக்கென்ன இலாபம்?
ஏன் இன்று இருக்கும் தலைவர்கள் கூட கட்சி சொத்தை எப்படி நிர்வகிக்க வேண்டுமென்பதைப் பற்றி தானைத் தலைவரிடம் பேசுவதில்லையே? அனைத்து ஊழல்களுக்கும் இவர்களும் உடைந்தையாக இருந்ததுதான் காரணம்.
இன்று சுங்கை சிப்புட்டில் இருக்கும் ‘பெரிய மண்டபம்’ சீனருக்கு விற்க பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருப்பதாகக் கேள்வி. இதற்கு காரணமென்ன? இந்தியருக்கு இந்தியருக்கு என்று சொல்லி தனக்கும் தன் குடும்பத்துக்கும் சேர்த்துக் கொண்டார் தானைத் தலைவர்.
மீதம் இருந்ததை மற்றவர் பங்கு போட்டுக் கொண்டனர். இதில் முந்நாள் சுப்ராவும் யோக்கியமில்லை. அவர் கையில் அடங்கியிருந்த நேசாவும், அதன் வழி உரிமை கொண்டிருந்த ‘CCB Bank’ ஒழிந்ததற்கு காரணம் அவர்தம் கையாளாகாத்தனம்தான்.
இப்படி ம.இ.க. தலைவர்கள் காலாகாலமாக இந்தியர்களை ஏமாற்றியது ஒன்னும் பெரிய இரகசியமில்லை. ஆனால் தற்சமயம ஆளும் மத்திய அரசாங்கத்தில் இந்தியரைப் பிரதிநிதித்து அங்கம் வகிக்கும் கட்சி என்பதால் பெருமையாக சொல்லும் அளவிற்காவது தேர்தலில் போட்டியிடும் இடங்களில் வெற்றி பெற வேண்டும். இல்லையேல் கிடைப்பதும் நாசமாகும். அப்புறம் வருத்தப்படபோவோர் இந்தியரே.
இன்றும் ம.இ.க. உட்பூசல் பூசி மெழுகும் வண்ணமே உள்ளது. உயர் மட்டத் தலைவர்கள் தம்மை எதிர்க்கக் கூடாது என்பற்காக சுப்ரா, பழனியின் ஜால்ராக்களிடம் பேரம் பேசி ம.இ.க. -விற்குள் கொண்டு வந்துள்ளார். பொது தேர்தல் முடிந்தவுடன் ம.இ.க. கட்சி தேர்தலுக்குள் இன்னொரு உட்பூசல் வெடிக்க இருக்கின்றது. புதிய அணி இப்பொழுதே உயர்மட்டத் தலைவர்களின் கையசைப்புடன் செயல்பட ஆரம்பித்துள்ளதாம். அதனால் அந்த கட்சியாலும் இந்தியர் யாதொரு மகாத்தான பயன் பெற்று விடப்போவதில்லை. ஆலையில்லாத ஊரில் இலுப்பைப் பூ சக்கரை என்பது போல இந்தியர்களுக்கு இந்த நாட்டில் சரியான அரசியல் பிரதித்துவம் இருப்பதாகத் தெரியாததால் அந்த ம.இ.க. நிற்கும் தொகுதிகளில் வெற்றிப் பெற செய்வது இந்தியரின் கடமையாகும்.
பொருளாதார மேதையாக இருந்தோரெல்லாம் இந்நாட்டில் சாதித்தது என்ன? கொள்ளையடிப்போரை தடுத்த நிறுத்த முடியவில்லையே. இது முந்நாள் இந்நாள் பேங்க் நெகரா தலைவர்களையும் சாரும். அதற்கான சான்று நேற்று நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட அறிக்கையே போதும்.
உலகத்திலேயே 101 வருடம் ஆன வீடு என்று மன்னர் ஆட்சியில் இல்லவே இல்லை ! அதனை அருங்காட்சியகமாக மட்ரி ரொம்ப நாளாகிறது ! அரண்மனை இதில் விதி விளக்கு ! LEASE என்பது 49 வருடம் ! 99 வருடம் என்பது FREE HOLD . கடைசியாக 100 வருடம் கழித்து , Britain கூட இந்த HONG KONG கை திருப்பி தந்து விட்ட்து ! பாவம் நீங்கள் ! நீங்களே ஒரு சடடத்தை இயட்ரி அதுனுல் அமர்ந்து கொள்கிறீர்கள் ! 17 லட்சம் கொண்ட ரோஹிங்கிய மக்களை அந்தநாட்டு குடிமகன்கள் இல்லை என்று விரட்டி அடிக்கும் பொழுது , இந்த நாட்டில் இருக்கும் இந்தியர்களை 25 லட்சம் மக்களை வருத்தடுக்க எவ்வளவு நேரமாகும் ? அப்படி நடந்தாலும் கூட , மா இ கா அதில் எவ்வளவு கொள்ளை அடிக்கலாம் என்றுதான் யோசிக்கும் தவிர ….
படித்த முட்டாளுக்குச் சிறந்த உதாரணம் இந்த நாட்டில் ‘Freehold Grant’ என்பதற்கான அர்த்தம் புரியாமல் பேசுவது.
மாடு மலடு என்று தெரிந்திருந்தும் வேறு கறவை மாடு இல்லை என்பதற்காக மலடான மாட்டில் பால் கறக்கச் சொல்வது நல்ல யுக்திதான், சபாஷ்..! 60 ஆண்டுகளாக இதைத் தானே செய்துகொண்டிருக்கிறோம். இப்போதாவது சொந்த புத்தியில் செயல்படச் சொன்னால் ஆகாதோ..? மக்களே அவன் சொன்னான் இவன் சொன்னான் என்பதற்காக உங்கள் சொந்த புத்தியை காலம் காலமாக அடகு வைத்தது போதும். இனியாவது சொந்த புத்தி சொல்வதைக் கேட்டுச் செயல்படுங்கள்.
freehold =999 years.
Malaysia நில சட்டம் leased 30 , 60 , 99 என்று குறிப்பிட்டுள்ளது. 999 free hold என்று குறிப்பிட பட்டுள்ளது . தவறு என்னுடையதுதான் , மறுப்பதற்கில்லை ! ஒரு வேலை அரசாங்கம் BANKRUPT ஆனால் நிலைமை என்னவோ ? https://www.hba.org.my/faq/lease_freehold.htm