இம்மாதத் தொடக்கத்தில் கோலசிலாங்கூர் போலீஸ் லாக்கப்பில் அடைக்கப்பட்டிருந்த போது தன்னை போலீசார் அடித்துத் துன்புறுத்தியதாக கே. ஜெயேந்தரன், 18, கூறினார்.
மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் இன்று காலையில் அவர் செய்த புகாரில் இவ்வாறு போலீஸ் மீது குற்றம் சாட்டினார்.
ஒரு கொள்ளை சம்பவம் சம்பந்தமாக கைது செய்யப்பட்ட அந்த இளைஞர் அவரது வழக்குரைஞர் கி. செல்வமலர், அவரது குடும்பத்தினர் மற்றும் பிகேஆர் வனிதா செயற்குழு உறுப்பினர் ஜுவைரியா ஸுள்கிப்லி ஆகியோருடன் இருந்தார். புக்கிட் அமான் பெடரல் போலீஸ் தலைமையகம் போலீசாரின் இந்தத் தவறான நடத்தையை விசாரிக்க ஒரு சுயேட்சையான பணிப்படையை அமக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
அந்த இளைஞர் செய்த போலீஸ் புகாரில் அவரையும் அவரது தகப்பனாரையும் போலீசார் நவம்பர் 7 இல் கைது செய்து எட்டு நாட்களுக்கு தடுப்புக் காவலில் வைத்திருந்தனர் என்று கூறியுள்ளார். இந்தப் புகாரை மலேசியாகினி பார்த்ததுள்ளது.
குற்றத்தை ஒப்புக்கொள்ளவில்லை என்பதற்காக இரண்டு சாதாரண உடை அணிந்திருந்த இரு போலீஸ்காரர்கள் தன்னை ரப்பர் குழாயால் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக அடித்தனர் என்றார்.
தாகமாக இருக்கிறது, தண்ணீர் வேண்டும் என்று கேட்ட போது ஒரு போலீஸ்காரர் தன்னை உதைத்தாகவும், மற்றொருவர் லோக்கப் மலத்தொட்டியிலிருந்து கொண்டுவந்தாக கருதப்படும் தண்ணீரை அவரது மூக்குத்துளைகளில் ஊற்றியதாக ஜெயேந்திரன் கூறிக்கொண்டார்.
சிரித்துக் கொண்டிருந்த அப்போலீஸ்காரர்களில் ஒருவர் ‘உனக்கு தண்ணீர்தானே வேண்டும், இதைக் குடி என்றாராம்.
போலீஸ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த ஜெயேந்திரன் தவறாக நடத்தப்பட்டதற்கான ஆதரம் இல்லை, இருந்தாலும் அச்சம்பவம் நடந்ததா என்பது பற்றி முழுமையான விசாரணையை மேற்கொள்வோம் என்று கோல சிலாங்கூர் போலீஸ் துணைத் தலைவர் முகம்ட் அஸ்ரி அப்துல் வஹாப் மலேசியாகினிக்கு அனுப்பியுள்ள செய்தியில் தெரிவித்தார்.
போலீஸ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த ஜெயேந்திரன் தவறாக நடத்தப்பட்டதற்கான ஆதரம் இல்ல. இந்த மாதிரி அதிகார துஷ்பிரயோகம், அராஜக செயலை செய்யும் யாரும் ஆதாரத்துடன் செய்வார்களா என்று கோல சிலாங்கூர் போலீஸ் துணைத் தலைவர் முகம்ட் அஸ்ரி அப்துல் வஹாப் தெரியாமல் இருப்பது ஆச்சிரியமே.
எக்காலத்தில் காவல் எதை ஒப்புக்கொண்டு இருக்கிறது? இல்லாத சாக்கு போக்கு சொல்லியே காலத்தை ஒட்டுகிறான்கள்- கேட்க அரசியல் தொரியம் இல்லை– ஒருவர்கைது பண்ணிய நேரத்திலிருந்து காணொளி கட்டாயமாக எடுக்க வேண்டும் -விடுப்பு இல்லாமல். நடக்குமா?