முன்னாள் சட்டத்துறை தலைவர் (ஏஜி) அப்துல் கனி பட்டேயிலின் ஓட்டுநர் ஆகஸ்ட் 29 இல் சுடப்பட்டது சம்பந்தமாக போலீசார் இன்னும் யாரையும் கைது செய்யவில்லை என்று துணைப் பிரதமர் அஹமட் ஸாகிட் ஹமிடி கூறினார்.
நாடாளுமன்றத்தில் அளித்த பதிலில், இப்போது வரையில் போலீஸ் யாரையும் கைது செய்யவில்லை ஏனென்றால் இதற்கான நோக்கத்தை நிர்ணயிப்பதற்காக் அவர்கள் இன்னும் தகவல் மற்றம் அந்த சந்தேப்படும் நபர் பற்றிய அடையாளங்கள் ஆகியவற்றை சேகரித்துக் கொண்டிருக்கின்றனர் என்று செப்பாங் நாடாளுமன்ற உறுப்பினர் முகம்மட் ஹனிபா மைடின் கேட்டிருந்த கேள்விக்கு ஸாகிட் கூறினார்.
யாரும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனரா? கைது செய்யப்பட்டிருந்தால், அவர்கள் மீது குற்றம் சாட்டப்படுமா? யாரும் கைது செய்யப்பட்டு குற்றம் சாட்டப்படவில்லை என்றால், ஏன்? என்று ஹனிபா கேட்டிருந்தார்.
இரண்டு அடையாளம் காணப்படாத நபர்கள் அம்பாங் பெர்டானாவில் கனியின் ஓட்டுநரை அவரின் வீட்டில் சுட்டதாக தெரிவிக்கப்பட்டது.
குற்றம் செய்தவரை பிடிக்காமல் போனாலும் பாதகமில்லை. இந்திரா காந்தியின் கணவன் ரிட்வான் அப்துல்லாவை கண்டா பிடிச்சி புட்டீங்க..ஏதாவது கதையை சொல்லிக்கலாம்.