ஆர்பிகே மீது வழக்கு தொடுக்கும் எண்ணத்தை மாற்றிக்கொண்டார் அபாண்டி

சட்டத்துறை     தலைவர்      அபாண்டி    அலி,   தம்மீது   அவதூறு   கூறும்   கட்டுரை   எழுதிய   வலைப்பதிவர்    ராஜா   பெட்ரா   கமருடின்மீது   இன்னும்    வழக்கு    தொடுக்கவில்லை.

ராஜா   பெட்ரா   “திவாலானவர்”  என்று    தெரிய   வந்திருப்பதால்   வழக்கு    தொடுக்க   யோசிப்பதாக   அபாண்டி    கூறினார்.

“இன்னும்   யோசித்துக்கொண்டுதான்    இருக்கிறேன்.    ஆராய்ந்து   பார்த்ததில்    அவர்   திவாலானவர்    என்பது    தெரிய    வந்தது.

“எனவே,  நொடித்துப்போன   ஒருவருக்கு   எதிராக    வழக்கு     தொடுப்பதா    என்று    யோசிக்கிறேன்.   பணம்   செலவு   செய்து   இறுதியில்   எதுவும்  கிடைக்கப்போவதில்லை.

“அதுதான்   யோசிக்கிறேன்”,  என  அபாண்டி   மலேசியாகினியிடம்    தெரிவித்தார்.

தம்மைப்   பழித்துரைத்த    ராஜா   பெட்ராவைக்  “கடைசிவரை  விடப்போவதில்லை”   என்று   சூளுரைத்தவர்தான்   அபாண்டி.   அவருக்கு   எதிராக    போலீஸ்   புகார்கூட    செய்திருக்கிறார்.

இப்போது   யுனைடெட்  கிங்டத்தில்    வசித்துவரும்   ராஜா   பெட்ரா   முன்பு   “ஏஜியைச்  சுற்றி   வலுவான   வதந்திகள்”   என்று   ஒரு   கட்டுரை    எழுதியிருந்தார்.  மூன்று   பகுதிகளாக    வெளியிடப்பட்ட    அக்கட்டுரையில்  அவர்     அபாண்டி   கூட்டரசு   நீதிமன்ற    நீதிபதியாக    இருந்தபோது    ஊழல்   புரிந்தார்   என்று   குற்றஞ்சாட்டியிருந்தார்.