தேர்தலுக்குப் பின்னர் ஜிஎஸ்டியை உயர்த்த அரசாங்கம் எண்ணவில்லை

பொதுத்    தேர்தலுக்குப்   பின்னர்   ஜிஎஸ்டியை  உயர்த்தும்   திட்டம்  எதுவும்   இல்லை    என   நிதி  துணை   அமைச்சர்   ஒத்மான்  அசிஸ்   இன்று   நாடாளுமன்றத்தில்    கூறினார்.  இப்போது  ஜிஎஸ்டி  ஆறு   விழுக்காடாகவுள்ளது.

“சில  தரப்புகள்   சில   காரணங்களுக்காக   அவ்வாறு  கூறியிருக்கலாம்.

“ஆனால்,    ஜிஎஸ்டியைத்   திருத்தி  அமைக்கும்    அல்லது   உயர்த்தும்  திட்டம்     எதுவும்   இப்போதைக்கு   இல்லை”,  என  மக்களவையில்   நிதி  சட்டவரைவு  2017  மீதான   விவாதத்தை   முடித்து   வைத்தபோது   அவர்   சொன்னார்.

ஜிஎஸ்டி   விகிதத்தை   ஏழு  விழுக்காடாக    உயர்த்துமாறு    உலகப்   பொருளகம்   பரிந்துரைத்திருப்பது   உண்மையா    என்று   வெங்   சென்  (பிகேஆர்-  கிளானா  ஜெயா)   கேட்டதற்கு   துணை   அமைச்சர்    இவ்வாறு   பதிலளித்தார்.

“நான்   அதை(உலகப்   பொருளகப்   பரிந்துரையை)ப்   பார்க்கவில்லை.  அதனால்  உறுதியாக   சொல்ல  முடியாது.  சிலர்   அப்படி   யோசனை   தெரிவித்திருக்கலாம்,  ஆனால்,  எங்களைப்   பொருத்தவரை   ஆறு  விழுக்காடுதான்”,  என  ஒத்மான்   கூறினார்.