சிலாங்கூர் அம்னோ மாநாட்டில் காலிட் இப்ராகிம் கலந்து கொண்டார்

 

சிலாங்கூர் மாநிலத்தின் முன்னாள் மந்திரி பெசார் காலிட் இப்ராகிம் இன்று பிடபுள்யுடிசியில் நடைபெற்ற சிலாங்கூர் அம்னோ மாநாட்டிற்கு வருகையளித்தார்.

பிற்பகல் மணி 3 அளவில், காலிட் தேவான் மெர்டேக்காவுக்குள் அம்னோ துணைத் தலைவர் அஹமட் ஸாகிட் ஹமிடியுடன் வந்து சேர்ந்தார்.

இப்போது சுயேட்சை பண்டார் துன் ரசாக் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் காலிட் முன்பு பிகேஆர் தலைமையிலான சிலாங்கூர் அரசின் மந்திரி பெசராக இருந்தார். ஆனால், அவர் 2014 ஆம் ஆண்டில் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

அதன் பின்னர், காலிட் பல பாஸ் கட்சியின் நிகழ்ச்சிகளில் காணப்பட்டார். தாம் பாஸின் போராட்டங்களை ஆதரித்தாலும், அக்கட்சியில் சேர்ந்துகொள்ளும் நோக்கம் தமக்கு இல்லை என்று கூறினார்.

2006 ஆம் ஆண்டில் பிகேஆரில் சேருவதற்கு முன்னர் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு காலிட் அம்னோ உறுப்பினராக இருந்திருக்கிறார். அவர் 12 ஆவது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் பிகேஆர் சிலாங்கூர் மாநில அரசின் மந்திரி பெசாரானார்.

காலிட்டுடன் இன்னொரு முன்னாள் மந்திரி பெசாரான முகமட் முகமட் தாயிப் அங்கு இருந்தார்.