பிஎன் அரசாங்கங்கள் மட்டும்தான் ஊழலானவை என்று கூறுவது நியாயமல்ல, ஸாகிட் கூறுகிறார்

 

பின் அரசாங்கங்கள் மட்டுமே ஊழலாவை என்ற தோற்றம் இருக்கிறது. அது நியாயமற்றது என்று துணைப் பிரதமர் அஹமட் ஸாக்டி ஹமிடி கூறினார்.

பிஎன் அரசாங்கம், அரசாங்க அதிகாரிகள் அல்லது அதிகாரம் படைத்தவர்களுடன், ஊழலானது என்ற தோற்றத்தை உருவாக்குவது நியாயமற்ற செயல் என்றாரவர்.

ஊழலை வேரறுப்பதற்கு பாரிசான் நேசனல் நிருவாகத்தில் இல்லாத மாநில அரசுகளையும் மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையம் (எம்எசிசி) விசாரிக்கும் என்று தாம் நம்பிக்கை கொண்டுள்ளதாக ஸாகிட் மேலும் கூறினார்.

தனியார் துறையையும் எம்எசிசி விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். அவர்களையும் ஊழல் எதிர்ப்பு வாக்குறுதி அளிக்க வகைசெய்ய வேண்டும், அரசாங்க ஏஜென்சிகள் செய்வது போல என்றாரவர்.

இலஞ்சம் வாங்குகிறவர்கள் விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்படுவத நாம் பார்க்கிறோம். “கொடுப்பவர் இல்லையென்றால், வாங்குகிறவர் இல்லை”, என்று அவர் போதனை செய்தார்.

ஊழல் ஒரு குற்றச்செயல். அது அரசாங்க நிருவாகத்தைக் கலங்கப்படுத்துவதுடன் தனியார் துறையின் தோற்றத்தையும் பாதிக்கிறது என்று அவர் மேலும் கூறினார்.