பேங்க் நெகாராவின் அந்நியச் செலாவணி சந்தையில் 1990களில் அடைந்த நட்டம் குறித்து விசாரணை நடத்திய அரச விசாரணை ஆணையம் (ஆர்சிஐ) எதிர்வரும் வெள்ளிக்கிழமை மாலை மணி 5க்குள் அந்த விசாரணையில் சாட்சியம் அளித்த முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகமட் தாக்கல் செய்திருந்த அவரின் 495 பக்க சாட்சியங்களை அதன் அறிக்கையில் சேர்க்க வேண்டும் என்று கோரும் கடிதத்தை அந்த ஆணையத்திற்கு அனுப்பியுள்ளார்.
அந்தக் கோரிக்கை கடிதத்தை ஆர்சிஐயின் செயலாளர் யூசுப் இஸ்மாயிலின் அலுவகத்திற்கு அவரின் சட்ட நிறுவனம் ஹனிப் காதிரி இன்று மதியத்தில் அனுப்பியது.
அந்த மூன்று பக்க கடிதம் மகாதிரின் கோரிக்கை நிறைவேற்றபடாவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறுகிறது.
மகாதிர் அளித்த சாட்சியங்கள் ஆர்சிஐயின் அறிக்கையில் விடப்பட்டுள்ளதைச் சுட்டிக் காட்டிய மகாதிரின் வழக்குரைஞர் ஹனிப், இது அரை வேக்காட்டு கதைகளைக் கொண்ட அறிக்கை என்று வர்ணித்தார்.