பினாங்கில் முந்தைய பிஎன் அரசு கட்டிக்கொடுத்ததைவிட இப்போதைய டிஏபி தலைமையிலான அரசு ஐந்து மடங்கு அதிகமாக கட்டுப்படி-விலை வீடுகளை பூமிபுத்ராக்களுக்குக் கட்டிக்கொடுத்துள்ளது என வீடமைப்புக்குப் பொறுப்பான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஜக்தீப் சிங் டியோ கூறினார்.
ஜக்தீப், மாநில அரசு பூமிபுத்ராக்களுக்கு வீடுகள் கட்டிக்கொடுப்பதில் அக்கறை காட்டவில்லை என பினாங்கு அம்னோ தொடர்புக்குழுத் தலைவர் சைனல் அபிடின் ஒஸ்மான் கூறியிருப்பதை மறுத்தார்.
2008-இலிருந்து 2017வரை பினாங்கு 24,227 குறைந்த மற்றும் நடுத்தர விலை வீடுகளைக் கட்டிக்கொடுத்துள்ளது. முன்பிருந்த பிஎன் அரசு கட்டிக்கொடுத்த வீடுகள் 5,124தான்.
“2008க்கு முன்பு பிஎன் கட்டியதைவிட நாங்கள் ஐந்து மடங்கு அதிகமான வீடுகளைக் கட்டியுள்ளோம்”, என்றாரவர்.