செனாய் டிஎபி சட்டமன்ற உறுப்பினர் வோங் சூ கீ கடந்த வாரம் ஜொகூர் மந்திரி பெசார் காலிட் நோர்டினை இலஞ்சக் குற்றச்சாட்டுகள் பற்றி குடைந்தெடுத்திருந்தார். அது குறித்து வோங்கை போலீசார் எதிர்வரும் வெள்ளிக்கிழமை விசாரிக்கவிருக்கின்றனர்.
இது சம்பந்தமாக போலீஸ் மேற்கொள்ளவிருக்கும் விசாரணையில் அவர்களுக்கு உதவுமாறு தம்மைக் கேட்டுக்கொண்டுள்ளதாக கூறிய வோங், இந்த விசாரணை அநேகமாக தாம் ஜொகூர் சட்டமன்றத்தில் நவம்பர் 28 இல் பேசியது சம்பந்தப்பட்டதாக இருக்கும் என்று தாம் நம்புவதாக அவர் கூறினார்.
அவருடைய பேச்சில், வோங் மந்திரி பெசார் காலிட் பூமிபுத்தராக்களுக்கான வீட்டு நிலங்களின் தகுதியை மாற்றிக்கொடுப்பதற்காக மேம்பாட்டாளர்களிடமிருந்து ரிம12 மில்லியன் பெற்றுக்கொண்டார் என்று குற்றம் சாட்டியிருந்தார்.
ஒரு வலைத்தளத்தில் பதிவு செய்யப்பட்டிருந்த ஒரு எம்எசிசி சாட்சி அளித்திருந்த கசியப்பட்ட சாட்சியத்தின் அடிப்படையில் இக்குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
மந்திரி பெசார் காலிட் இக்குற்றச்சாட்டுகளை மறுத்து அவை அடிப்படையற்ற அவதூறு என்று கூறியுள்ளார்.
வோங் மேற்கோள் காட்டிய சாட்சியின் அறிக்கை கசியப்பட்ட ஒன்று என்பதை எம்எசிசி உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால், அந்த அறிக்கையைக் கொடுத்த சாட்சி அப்துல் ரவுப் அந்த அறிக்கை ஜோடிக்கப்பட்டது என்று போலிஸ் புகார் செய்துள்ளார்.
விசாரிக்க வேண்டியவரை விசாரிக்காதிருப்பது இந்நாட்டில் வழக்கம்தானே!
இதுதான் இன்றைய வழக்கம்– புகார் தாரர் குற்றவாளி ஆக்கப்படுவது. இது காக்கா ஆரம்பித்து வைத்தது இன்று அதிகாரத்தில் இருப்பவனுக்கு சுலபமாகிவிட்டது எப்படி தன்னை காத்து கொள்ள –