கெரக்கானின் புதிய 27,000 உறுப்பினர்கள் பற்றி கோ தம்பட்டம்

கெரக்கான் கட்சிக்கு காலத்திற்கு ஒவ்வாதது என கூறப்படுவதை அதன் தலைவர் கோ சூ கூன் மறுத்துள்ளார்.

2008  தொடக்கம் அந்தக் கட்சியில் புதிதாக நாடு முழுவதும் 27,000 புதிய உறுப்பினர்கள் இணைந்துள்ளதாக அவர் சொன்னார்.

சபாவில் மட்டும் 10,000 பேரும், பாகாங்கில் 4,000 பேரும் புதிதாகக் கெரக்கானில் சேர்ந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

ஆனால் பினாங்கில் மட்டும் குறைந்த எண்ணிக்கையிலான உறுப்பினர்கள் புதிதாக இணைந்துள்ளனர். என்றாலும் அங்குள்ள கெரக்கான் கிளைகள் ஒவ்வொன்றிலும் முழு உறுப்பியமான ஆயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இருப்பதாக கோ கூறிக் கொண்டார்.

பினாங்கில் இப்போது மொத்த கெரக்கான் உறுப்பினர் எண்ணிக்கை 50,000 ஆகும்.

“நாங்கள் (கெரக்கான்) காலத்திற்குப் பொருத்தமானவர்கள் என்பதை அது பிரதிபலிக்கிறது. கடந்த காலத்தில் எங்களுக்கு அதிகச் செல்வாக்கு இல்லாத மாநிலங்களில் நாங்கள் அதிகமான உறுப்பினர்களை இப்போது பதிவு செய்துள்ளோம். அங்கு நாங்கள் இப்போது கூடுதல் ஆதரவைப் பெற்று வருகிறோம்.”  கோ, நேற்றிரவு நடைபெற்ற கட்சி விருந்து நிகழ்வு ஒன்றில் பேசினார்.

“நாடாளுமன்ற, சட்டமன்ற பேராளர் எண்ணிக்கையில் நாங்கள் 100 விழுக்காடு ஏற்றத்தைக் கண்டுள்ளோம். கடந்த பொதுத் தேர்தலுக்குப் பின்னர் நால்வர் மட்டுமே இருந்தனர். சுயேச்சைகளாக இருந்த சபாவில் மூவரும் பாகாங்கில் ஒருவரும் இப்போது எங்கள் பக்கம் வந்துள்ளனர்.”

ஆகவே நாங்கள் காலத்துக்கு ஏற்றவர்கள் அல்ல எனச் சொல்ல வேண்டாம். அந்தப் பேராளர்கள் மற்றவர்களைத் தேர்வு செய்யாமல் ஏன் எங்களைத் தேர்வு செய்தனர் ?” என கோ வினவினார்.

சபாவைச் சேர்ந்த – தஞ்சோங் பாப்பாட் உறுப்பினர் ரேமண்ட் சூ கியா, எலோபுரா உறுப்பினர் ஆவ் காம் வா, காராமுந்திங் உறுப்பினர் பீட்டர் பாங் யின், பாகாங்கைச் சேர்ந்த தானா ராத்தா உறுப்பினர் ஹோ யிப் காப் ஆகியோரே அந்த நால்வரும் ஆவர்.

தனது கோட்டையான பினாங்கில் போட்டியிட்ட எல்லாத் தொகுதிகளிலும் தோல்வி கண்ட கெரக்கான் காலத்துக்கு ஒவ்வாதது என செலவுக் கணக்கு எழுதப்பட்டு விட்டது.

ஆனால் அண்மைய காலமாக கோவை வெளியேற்றுவதற்கு கட்சிக்கு உள்ளும் புறமும் தீவிர  முயற்சிகள் செய்யப்படுகின்றன. அதனால் பிஎன்னில் தமது அரசியல் வாழ்வு நிலைத்திருக்க கூட்டரசு அமைச்சருமான அவர் போராடி வருகிறார்.