சிலாங்கூர் சுல்தான் பற்றி முன்னாள் சட்டத்துறை அமைச்சர் ஸைட் இப்ராகிம் தெரிவித்திருந்த கருத்துக்கு வன்முறையைத் தூண்டும் விதத்தில் பதில் அளிக்கப்படுவது பற்றி அவர் அலட்டிக்கொள்ளவில்லை.
அவரைப் பொறுத்தவரையில், அவரது படத்திற்கு நெருப்பு வைக்கும் செயல் அம்னோவின் கீர்த்திக்கு சூடு போட்டு விட்டது
இருபத்தோறாம் நூற்றாண்டில் மலாய்க்காரர்களைப் பிரதிநிதிக்கும் கட்சி என்று கூறிக்கொள்ளும் இக்கட்சிக்காக நான் வருத்தபடுகிறேன் கூறிய ஸைட், அம்னோவுக்கு என்ன ஆயிற்று என்று தமக்குத் தெரியவில்லை என்றார்.
“எனது படத்திற்கு தீ மூட்டுவது என்னை அல்லது நான் செய்தவற்றைப் பிரதிபலிக்கவில்லை. அது அவர்கள் பற்றிய பிரதிபலிப்பு ஆகும். இது சிறுபிள்ளைத்தனமானது என்பதோடு வன்முறையானது. அது அவர்களுக்குத் தெரிய வேண்டும்”, என்று அந்த முன்னாள் அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர் மலேசியாகினியிடம் கூறினார்.
ஸைட்டின் படங்களுக்கு சுங்கை பெசார் அம்னோ தலைவர் ஜமால் யூனுஸ் தீ மூட்டியது பற்றி கருத்துரைக்கையில் ஸைட் இப்ராகிம் இவ்வாறு கூறினார்.