மகாதிர்: ஜோ லவ்வை பிடிப்பதற்கு அழகான பெண்களைப் பயன்படுத்த வேண்டும்

ஜோ லவ்வை பிடிப்பதற்கு இரண்டு வழிகள் இருக்கின்றன என்று டாக்டர் மகாதிர் கூறினார்.

முதலாவது, பெண்களை வைத்து அந்த பினாங்கில் பிறந்த வணிகரை வசீகரிக்க வேண்டும்.

ஜோ லவ் செல்வாக்கு மிக்க சக்திகளால் பாதுகாக்கப்படுகிறார். எப்படி அவர் தப்பித்தார் என்று தெரியவில்லை

“நல்ல மணம் வீசும், புன்னகை பூத்த முகம் ஆகியவற்றை கொண்ட பெண்களை வைத்து அவரை வசீகரிக்க வேண்டும் என்று நான் அரசாங்கத்திற்கு ஆலோசனை கூற விரும்புகிறேன். அவரைப் பிடித்து விடலாம்”, என்று அக்கருத்தரங்கில் இன்றிரவு மகாதிர் கூறினார்.

லவ்வை பிடிப்பதற்கான இரண்டாவது வழி, மகாதிரின் கணிப்புப்படி, முதலில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கை ‘பிடிக்க வேண்டும்”.

“நாம் எப்படி அதைச் செய்வது? எதிர்வரும் பொதுத் தேர்தலில் அவரை (நஜிப்பை) தோல்வியுறச் செய்ய வேண்டும்.

“பின்னர், அவர் சிறையில் இருப்பார், நாம் அவரைக் கேட்கலாம், திரு. நஜிப், ஐயா, ஜோ லவ் எங்கே இருக்கிறார்?, என்று மகாதிர் கூறினார்.

கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் சீன அசெம்பிளி மண்டபத்தில் நடைபெற்ற “சீனா ஜோ லவ்வை பாதுகாக்கிறது” என்ற தலைப்பைக் கொண்ட கருத்தரங்கில் மகாதிர் பேசினார். அமனா இளைஞர் பிரிவின் “அனாக் மூடா சஐ ஜோ லவ் (எஎம்சிஜஏல்) இயக்கம் இதற்கு ஏற்பாடு செய்தது.

“தொடர்ந்து பேசிய மகாதிர், இளைய தலைமுறையினரின் நலன்களுக்காக ஜோ லவ் நீதியின்முன் நிறுத்தப்பட வேண்டும்., ஏனென்றால் 1எம்டிபியின் ரிம42 பில்லியன் கடனை அந்தத் தலைமுறையினர்தான் கட்ட வேண்டி வரும்.

“அது எம்ஒ1 (மலேசியன் ஓபிசியல் நம்பர் 1) – அது யார் என்று தெரியாது – அவர் ஜோ லவ் மற்றும் ரீஸா அஸிஸ் ஆகியோருடன் சேர்ந்து 1எம்டிபியிலிருந்து திருடிய பணத்தைச் சலவை செய்ய முயன்றனர்.

“நீங்கள் ரிம100 அல்லது ரிம200-ஐ திருடினால் அதை சலவை செய்ய வேண்டிய தேவை இல்லை, சட்டைப்பையில் திணித்து விட்டு, கடகைக்குச் சென்று உணவு உட்கொள்ளலாம்.

“நீங்கள் பில்லியன் கணக்கில் திருடினால், அதை எங்கேயும் மறைக்க முடியாது, அதனால்தான் அவர்கள் அதை பொருள்களாக மாற்றினர்”, என்று மகாதிர் கூறினார், 1எம்டிபியிலிருந்து திருடிய பணத்திலிருந்து வாங்கிய அவர்களின் ஆபரணங்கள், உல்லாசப்படகு மற்றும் இதர சொத்துக்களை அவர் மறைமுகமாகக் குறிப்பிட்டார்.

1எம்டிபியின் கடனைக் கட்டுவதற்கு ஜிஎஸ்டியை ஒரு வழியாக அரசாங்கம் பயன்படுத்துகிறது என்று மகாதிர் அடிக்கடி கூறிவருவதை மீண்டும் கூறினார்.

“ஜிஎஸ்டி இல்லாமல் நாட்டை நிருவகிக்க முடியாது என்று அரசாங்கம் கூறுகிறது. முன்பு, நம்மிடம் ஜிஎஸ்டி இல்லை, ஆனால் நம்மிடம் பணம் இருந்தது, நம்மிடம் மேம்பாடு இருந்தது.

“ஜிஎஸ்டி நஜிப் பணம் திருடுவதைச் சாத்தியமாக்குகிறது. என்னுடைய காலத்தில், பிரதமர் என்ற முறையில் ஒருவர் பணத்தை திருடலாம் என்பது எனக்குத் தெரியாமல் போய்விட்டது…நான் எனது வாய்ப்பைத் தவறவிட்டு விட்டேன்”, அவர் விகடமாகக் கூறினார்.

நஜிப் சட்ட ஆளுமைக்கு மதிப்பு அளிப்பதில்லை என்று கூறிய மகாதிர், தற்போதையப் பிரதமர் சம்பந்தப்பட்ட அனைத்து அரசு அமைப்புகளையும், போலீஸ், எம்எசிசி, சட்டத்துறை தலைவரையும்கூட, அவரது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் என்று மகாதிர் மேலும் கூறினார்.

“சாட்சியங்களை மறைப்பது ஒரு குற்றம், ஆனால் நாம் கண்டது ஏஜி (முகமட் அபாண்டி அலி) பேங்க் நெகாரா மலேசியா, எம்எசிசி மற்றும் பொதுக்கணக்குக் குழு ஆகியவற்றின் மூன்று சாட்சியங்களை எடுத்து அவற்றை அதிகாரப்பூர்வமான இரகசியங்கள் சட்டத்தின்கீழ் வகைப்படுத்தியதாகும்.

“ஏஜிக்குத் தெரியாமல் இருப்பது தற்போதைய நவீன தொழில்நுட்பத்தில், மக்கள் படம் (ஆவணங்களை) எடுத்து அவற்றை பெரிதாக்கிக் காட்ட முடியும். ஏஜி (சட்டத்துறை தலைவர்) ஒரு கயவன்”, என்று மகாதிர் உரக்கக் கூறினார்.

இக்கருத்தரங்கில், அமனா இளைஞர் பிரிவுத் தலைவர் முகமட் ஃபயிஸ் ஃபாட்ஸில் மற்றும் சமூக ஆர்வலர் ஹிசாமுடின் ராயிஸ் ஆகியோரும் பங்கேற்றனர்.