14 ஆவது பொதுத் தேர்தலுக்கு முன்னதாக நடைபெறும் அம்னோவின் கடைசி பொதுப் பேரவை கூட்டத்தில் உரையாற்றிய அம்னோ தலைவர் நஜிப் ரசாக், அம்னோ அடுத்த 1,000 ஆண்டுகளுக்கு இருக்கும் என்று பிரகடனம் செய்தார்.
அதே சமயத்தில் அவர் கடும் எச்சரிக்கையும் விடுத்தார். அடுத்தப் பொதுத் தேர்தலில் அம்னோ தோற்கடிக்கப்பட்டால், அது நாட்டிலுள்ள மலாய் அமைப்புகளுக்கு பேராபத்தை விளைவிக்கும் என்றாரவர்.
“அம்னோ தொடர்ந்து வாடாததாக இருக்கும், வாழும் மற்றும் வழிநடத்தும், வெறும் அடுத்த 30 ஆண்டுகளுக்கு மட்டுமல்ல, ஆனால் இன்னொரு 1,000 ஆண்டுகளுக்கு!’, என்று பேராளாளர்களின் மகிழ்ச்சி ஆரவாரத்திற்கிடையே நஜிப் கூறினார்.
அடுத்தப் பொதுத் தேர்தல் “இந்த நாட்டின் தலைவிதியை” நிர்ணயிக்கும் என்றார்.
ஆபத்தான நிலையில் இருப்பவை, இஸ்லாம், முடியரசு, மாரா, பெல்டா, தாபுங் ஹஜி, யூனிவர்சிட்டி டெக்னோலஜி மாரா (யுஐடிஎம்) போன்ற மலாய் அமைப்புகள் ஆகும்.
எதிரணி வெற்றி பெற்றால்… இந்த நாட்டின் முதன்மையான மூதாதையர் என்ற முறையில் மலாய்க்காரர்களின் சிறப்புரிமை பாதிப்படையும். இன்னும் மோசமானது, அவர்கள் நிலையான இருப்பிடம் அற்றவர்களாகி விடுவர். ஆகையால், மக்களின் மற்றும் நாட்டின் வாழ்வு மற்றும் விதியை உறுதி செய்யும் பெரும் பொறுப்பை அம்னோ சுமந்து கொண்டிருக்கிறது என்று நஜிப் கூறினார்.
இப்போதைய நாடாளுமன்றத்தின் தவணை ஜூன் 26, 2018 முடிவுக்கு வருகிறது. அடுத்தப் பொதுத் தேர்தல் அந்தத் தேதியிலிருந்து 60 நாட்களுக்குள் நடத்தப்பட வேண்டும்.