‘மகாதிரைப் பிரதமராக நினைப்பவர்கள் முகாபேக்கு நேர்ந்ததை நினைத்துப் பார்க்க வேண்டும்’

பொதுத்   தேர்தலில்   வென்றால்  பக்கத்தான்   ஹராபான்     டாக்டர்  மகாதிர்   முகம்மட்டை    இடைக்காலப்  பிரதமராக்க    பரிந்துரைத்திருப்பதை   நஜிப்   அப்துல்   ரசாக்   எள்ளி  நகையாடினார்.

“வாழ்க்கையின்  இறுதிக்கட்டத்தில்   உள்ள    ஒருவரைப்  பிரதமராக்க    சிலர்  விரும்புவது   விசித்திரமாக  உள்ளது.

“ஸிம்பாப்வே   முன்னாள்   அதிபர்   ரோபர்ட்  முகாபேக்கும்   அவரது   வயதுதான்.  ஆனால்,  அந்நாட்டு  மக்கள்   அவரை  நிராகரித்து  விட்டார்கள்”,  என்றார்.

அம்னோ   தலைவரான  நஜிப்,  அக்கட்சியின்  71வது    பொதுப்பேரவையில்  இன்று   பேசினார்.

கடந்த   வார  இறுதியில்   பக்கத்தான்  ஹராபானின்   அலோசனைக்  கூட்டத்தில்   மகாதிரை   இடைக்காலப்   பிரதமராகவும்    பிகேஆர்  தலைவர்   வான்   அசிசா   வான்  இஸ்மாயிலைத்    துணைப்பிரதமராகவும்   நியமிக்கலாம்   என்று   ஒரு  பரிந்துரை   முன்வைக்கப்பட்டது.

அது  ஒரு   பரிந்துரைதான்   என்றும்  முடிந்த  முடிபல்ல    என்றும்   பிகேஆர்  வலியுறுத்தியுள்ளது.