ஜெருசலத்தை இஸ்ரேலின் தலைநகரமாக அங்கீகரிக்கும் அமெரிக்க முடிவை எதிர்த்து முஸ்லிம்கள் நாளை அமெரிக்கத் தூதராகத்துக்கு வெளியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட வேண்டும் என பாஸ் கேட்டுக்கொண்டிருக்கிறது.
கட்சி உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்வது கட்டாயம் என்றும் பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங் ஓர் அறிக்கையில் குறிப்பிட்டார்.
“டோனல்ட் ட்ரம்ப்பின் பிரகடனத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்க இனவேறுபாடின்றி முஸ்லிம்கள் அனைவரையும் பாஸ் அழைக்கிறது”, என்றாரவர்.
இன்று முன்னேரம் ஜெருசலத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிப்பதாக அறிவித்த ட்ரம்ப் டெல் அவிவியில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தை அங்கு கொண்டு செல்லும்படியும் உத்தரவிட்டார்.
ட்ரம்பின் அறிவிப்பு, இஸ்ரேல் ஜெருசலத்தின் பல பகுதிகளைச் சட்டவிரோதமாக தன்வசம் வைத்துக்கொண்டிருப்பதாகக் கருதும் அரபு உலகை ஆத்திரப்பட வைத்துள்ளது.