சீன மற்றும் இந்திய சமுதாயங்களில் சிலர், எதிர்க்கட்சிகளின் பொய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக நஜிப் தெரிவித்துள்ளார்.
இன்று, அம்னோ பொதுக்கூட்டத்தில், தலைமை உரையாற்றிய அவர், அம்னோவை ஓர் இனவெறி கட்சி என்று கூறுவதை நிராகரித்தார்.
“அம்னோ இனவாதக் கட்சி அல்ல. இல்லையென்றால், நாம் எப்படி ஏற்றுகொள்ளப்பட்டோம்? பல ஆண்டுகளாக, பல்லினங்களைக் கொண்ட உறுப்புக்கட்சிகளுக்கு எப்படி ஒரு விவேகமான முறையில் தலைமைத்துவத்தை வழங்கிவர முடிந்தது?
“அம்னோ உண்மையில் எல்லாவற்றையும் எட்டுகிறது, நாட்டில் பன்முகத்தன்மையை கொண்டாடுவதோடு, நாம் ஒன்றிணைந்து, ஒற்றுமையுடன், இணக்கமாக வாழ விரும்புகிறோம். ஆக, அம்னோ சீனர்களுக்கு எதிர்ப்பானது அல்ல என்று நான் மீண்டும் சொல்கிறேன்.”
எனினும், சீனர்களும் இந்தியர்களில் சிலரும், எதிர்க்கட்சியினரின் பால் “ஈர்க்கப்பட்டு, எதிர்ப்பு உணர்வுகள் மற்றும் பொய்களின் பிடியில் சிக்கியுள்ளனர்” என்றார்.
எதிர்க்கட்சியின் “விளையாட்டு”, அம்னோவைக் கிட்டத்தட்ட கொன்றுவிட்டது, என்பதையும் நஜிப் ஒப்புக் கொண்டார்.
“எல்லாருக்கும் தெரியும், அம்னோ பலவீனம் அற்றது. நாங்கள் இன்னும் வெற்றி பெற்றுகொண்டுதான் உள்ளோம், 79 சீட்டுகளில் இருந்து 88 சீட்டுகளாக நாடாளுமன்ற இடங்களை அதிகரித்து உள்ளோம். எனினும், எதிர்க்கட்சியின் மோசமான விளையாட்டின் விளைவால், மக்களிடையே ‘அரசியல் உணர்வு’ மாறி நாம் பாதிப்படைந்துள்ளோம்.
“கிட்டத்தட்ட இந்த அரசியல் விளையாட்டால், நாம் கொல்லப்பட்டு வருகிறோம். உண்மையில், நாம் சரியான பாதையில் இருக்கிறோம், ஆர்வத்துடன் போராடி வருகிறோம். ஆனால், எதிரிகளோடு ஒப்பிடும் போது, அவர்கள் முழுமையாக நாடகமாடி, நன்றாக ‘விளையாடி’ வருகின்றனர்,” என்று அவர் கூறினார்.