எதிரணியான பக்கத்தான் ஹரபான் ஜெருசலத்தை இஸ்ரேல் தலைநகராக அங்கீகரித்துள்ள அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்புக்குக் கண்டனம் தெரிவித்துக் கொண்டிருக்கிறது.
கண்டன மகஜரைக் கோலாலும்பூரில் உள்ள அமெரிக்கத் தூதரகத்திடம் வழங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமனா தலைவர் முகம்மட் சாபு , அம்முடிவு வருத்தமளிக்கிறது என்றும் எல்லா இஸ்லாமியர்களும் பாலஸ்தீன மக்களுடன் ஒன்றுபட்டு அதைக் கண்டிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
“ஓஐசி(இஸ்லாமிய ஒத்துழைப்பு நிறுவனம்), ஐரோப்பிய ஒன்றியம், ஐநா ஆகியவை அவசரக் கூட்டம் நடத்தி இவ்விவகாரத்துக்குத் தீர்வு காண வேண்டும்”, என முகம்மட் சாபு கேட்டுக்கொண்டார்.