கலைஞர்கள் அரசியல் முட்டாள்கள் அல்லர்- உள்ளூர் நடிகை மியாவ் மியாவ்

நாட்டில்  விலைவாசி  உயர்வு  குறித்து   டிவிட்   செய்ததற்காக  பலருடைய  குறைகூறலுக்கு    ஆளான   ஷிலா  மஜிட்டுக்கு   ஆதரவாக    மியாவ்  மியாவ்  என்ற  பெயரில்   பிரபலமாக   விளங்கும்   உள்ளூர்   நடிகை   லிம்   சிங்  மியாவ்   குரல்   கொடுத்துள்ளார்.

நேற்று  முகநூலில்   பதிவிட்ட  லிம்,  கலைஞர்கள்   இந்நாட்டின்   குடிமக்கள்,       கருத்துச்  சொல்லும்  உரிமை    அவர்களுக்கும்   உண்டு    அவர்கள்  ஒன்றும்  “அரசியல்  முட்டாள்கள்”  அல்லர்  என்று  குறிப்பிட்டார்.

“இந்த   மலாய்  பாடகர்   அவருடைய   கருத்தைத்    தெரிவித்தார்.  அதில்   என்ன   தப்பு?

“கலைஞர்களாகிய   நாங்களும்  இந்நாட்டுக்  குடிமக்கள்தாம்  என்பதை    மறந்து  விடாதீர்கள்.  கருத்துச்  சொல்லும்   உரிமை    எங்களுக்கும்   உண்டு”,  என்றவர்   பதிவிட்டிருந்தார்.

மலேசியாகினி   அவரைத்   தொடர்புகொண்டபோது   லிம்,  மக்கள்   எரிபொருள்  விலை  உயர்வாலும்   வாழ்க்கைச்  செலவினம்   உயர்ந்து   வருவதாலும்   துன்பப்படுவதாகக்   கூறினார்.

“17ஆண்டுகளாக  கோலாலும்பூரில்   வசித்து   வருகிறேன் பொருள்களின்   விலை  உயர்வைப்  பார்த்துக்கொண்டுதான்    வருகிறேன்.  ஆனால்,  எங்கள்   சம்பளம்   உயரவில்லை.  குறைந்துதான்   போயுள்ளது.

பொருள்களின்  விலை  உயர்வால்  மக்கள்   “மூச்சுத்  திணறல்”  ஏற்பட்டுத்  தடுமாறுகிறார்கள்  என  லிம்   கூறினார்.

“ஜிஎஸ்டிக்குப்  பிறகு   எல்லாப்  பொருள்களின்  விலைகளும்   உயர்ந்து   விட்டன.   6விழுக்காட்டுக்கும்   கூடுதலாகவே   உயர்ந்து   விட்டன”,  என்றார்.