ஜமாலின் சுத்தியால் அடிப்பேன் அச்சுறுத்தலைத் தொடர்ந்து ஸைட் ஐஜிபியின் பாதுகாப்பை நாடுகிறார்

 

மண்டையில் சுத்தியால் அடிப்பேன் என்று சுங்கை பெசார் அம்னோ தலைவர் ஜமால் முகமட் யுனுஸ் விடுத்திருந்த அச்சுறுத்தலின் விளைவாக முன்னாள் சட்டத்துறை அமைச்சர் ஸைட் இப்ராகிம் போலீஸ் படைத் தலைவர் (ஐஜிபி) முகமட் பூஸியின் பாதுகாப்பை நாடியுள்ளார்.

ஜமாலும் அவரது அம்னோ நண்பர்களும் என்னை சுத்தியால் மண்டையில் அடிக்கப் போவதாக விடுத்திருக்கும் மருட்டாலால் நானும் எனது குடும்பத்தினரும் எங்களது பாதுகாப்பு குறித்து அச்சம் அடைந்துள்ளோம். ஐஜிபி எங்களைப் பாதுகாப்பார் என்று நம்புகிறேன் என்று ஸைட் டிவிட் செய்துள்ளார்.

அம்னோ தலைமைத்துவம் சூழ்நிலையைத் தணிக்க முடியும் என்று என்னால் நம்பமுடியாது. ஆகவே, நாங்கள் போலீசை நம்பியிருக்கிறோம் என்றாரவர்.

இன்று காலையில், அட்டைப்பலகையிலான ஸைட்டின் உருவப்படத்தை புத்ரா உலக வாணிப மையத்திற்கு வெளியில் ஜமால் சுத்தியால் அடித்து நொறுக்கினார்.

அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிட்டால், தாம் ஸாகிட்டை வேட்டையாடிப் பிடிப்பேன் என்று கூறிய ஜமால், இந்த “மிருகத்திற்கு” எதிராக நடவடிக்கை எடுப்பதில் ஏன் தாமதம் என்று அவர் கேட்டார்.

“(அதிகாரிகளிடமிருந்து) நடவடிக்கை இல்லையென்றால், இந்த சுத்தி நாளை அவரது (ஸைட்டின்) தலையைச் சென்று பார்க்கும்”, என்று ஜமால் செய்தியாளர்களிடம் கூறினார்.