சிலாங்கூர் சுல்தான் – ஸைட் விவகாரத்தில் டிஎபி ஒதுங்கி நிற்கிறது

 

சிலாங்கூர் சுல்தான் கருத்துக்கு பதில் அளித்ததின் எதிர்விளைவுகளை முன்னாள் சட்டத்துறை அமைச்சர் ஸைட் இப்ராகிம்தான் எதிர்கொள்ள வேண்டும் என்று சிலாங்கூர் டிஎபியின் தலைவர் டோனி புவா கூறுகிறார்.

இந்த விவகாரத்தில் டிஎபியின் நிலைப்பாடு என்ன என்ற கேள்விக்கை, நிலைப்பாடு ஏதும் இல்லை என்று புவா பதில் அளித்தார்.

நமது உறுப்பினர்கள் அவர்களது கருத்துகளைக் கூற அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனல் அதனால் ஏற்படும் பின்விளைவுகளை அவர்களே எதிர்கொள்ள வேண்டும் என்று புவா மேலும் கூறினார்.

டிஎபிக்கும் அந்த அறிக்கைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, ஏனென்றால் அதை கட்சி செய்யவில்லை. ஸைட் டிஎபியில் எந்தப் பதவியிலும் இல்லை என்று புவா மேலும் கூறினார்.

ஸைட் விடுத்திருந்த அறிக்கைக்கு எதிராக சுங்கை பெசார் அம்னோ தலைவர் ஜமால் வன்முறைச் செயலில் இறங்கியுள்ளார். ஸைட்டின் படத்திற்கு தீ மூட்டினார். சுத்தியால் மண்டையை உடைப்பேன் என்று மிரட்டியுள்ளார்.

இவ்வளவுக்கும் டிஎபியின் தலைமைத்துவம் மௌனமாக இருந்து வருகிறது. மேலும், பக்கத்தான் தலைவர்கள், மகாதிர் உட்பட, மௌனமாக இருக்கிறார்கள்.

இவர்களுக்கு மாறாக, சிலாங்கூர் அம்னோ சிலாங்கூர் சுல்தானுக்கு ஆதரவாக வரும் ஞாயிற்றுக்கிழமை ஒரு பேரணியை நடத்தப் போவதாக அறிவித்துள்ளது.