இப்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் அம்னோ பேராளர் ஆண்டுப் பொதுக் கூட்டம் எதிர்பார்த்தபடி பலவகையான குற்றச்சாட்டுகளை பக்கத்தான் ஹரப்பானுக்கு எதிராக அள்ளிவீசிக் கொண்டிருக்கிறது.
இதில் ஆழ்ந்த வெறுப்பை ஏற்படுத்துவது பினாங்கில் நவம்பர் 5 இல் தொடங்கிய வெள்ளம் பற்றி பிரதமர் நஜிப் கூறியது. கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பினாங்கு மாநிலத்திற்கு மத்திய அரசாங்கத்தின் உதவி கோரி பினாங்கு முதல்வர் லிம் குவாங் எங் கிட்டத்தட்ட கண்ணீர் வடிய துணைப் பிரதமரிடம் வேண்டுகோள் விடுத்தார் என்று அவரது தாராள நோக்கத்தைக் காட்டிக்கொள்ள அம்மாநாட்டில் பிரதமர் நஜிப் கூறினார்.
மத்திய அரசின் உதவியை பினாங்கு மக்களுக்காக கோரிய போது அம்மாநில முதல்வர் கிட்டத்தட்ட கண்ணீர் சிந்தினார். முதல்வர் கண்ணீர் சிந்தினார், அதனால் என்ன? மிகக் கொடுமையாகப் பாதிக்கப்பட்ட நேரத்தில் மாநில மக்களுக்காக முதல்வர் கண்ணீர் சிந்தியது மக்கள்மீது அவர் கொண்டுள்ள உண்மையான அக்கறையைக் காட்டவில்லையா என்று நாடாளுமன்ற உறுப்பினர் ராம்கர்ப்பால் வினவினார்.
தாங்கள் அனுபவித்தத் துன்பத்தை அரசியல் நோக்கத்திற்காக ஓர் அம்னோ நிகழ்ச்சியில் ஒரு தீவனமாகப் பயன்படுத்தப்படும் என்று பினான்கு மக்கள் அவர்களின் கனவில்கூட நினைத்திருக்க மாட்டார்கள் என்று ராம்கர்பால் மேலும் கூறினார்.
வெள்ளம் சூழ்ந்த போது பினாங்கு முதல்வர் அந்த மா நிலத்தில்த்ததான்
இருந்தார் ! மாறாக அமெரிக்காவில் கோல்ப் விளையாடி கொண்டிருக்கவில்லை என்பது நினைவில் கொள்ள வேண்டும்.
அழுதால் தான் என்ன? தனது மக்களை நேசிக்கும் ஒரு தலைவனுக்கு அது எப்படி அழுகை வராமல் போகும்?