டிஎம்ஐமீது எம்சிஎம்சி விசாரணை: சாலே உறுதிப்படுத்தினார்

மலேசிய  தொடர்பு,  பல்லூடக   ஆணையம் (எம்சிஎம்சி)  த   மலேசியன்  இன்சைட்(டிஎம்ஐ)மீது   விசாரணை  மேற்கொண்டிருக்கிறது.   தேவையானால்   அதன்மீது   நடவடிக்கை   எடுக்கப்படும்.

“டிஎம்ஐமீது   புகார்  ஒன்று   பெறப்பட்டது. எம்சிஎம்சி  இப்போது   விசாரிக்கத்   தொடங்கியுள்ளது.

“அது  சட்டத்தை  மீறியிருந்தால்   அது  குறித்து   விசாரிப்போம்,  மேல்நடவடிக்கைக்காக   விசாரணை   அறிக்கையை   உரிய   அதிகாரிகளிடம்  அனுப்பி  வைப்போம்”,  எனத்   தொடர்பு,  பல்லூடக   அமைச்சர்  சாலே  சைட்   கெருவாக்   இன்று   புத்ரா  உலக   வணிக  மையத்தில்     செய்தியாளர்களிடம்    தெரிவித்தார்.

புகாரின்  தன்மை   குறித்து   அவர்  விவரிக்கவில்லை.

இன்று  காலை  அம்னோ   பேரவையில்   பினாங்கு   பேராளர்,  அம்னோ   தலைமைத்துவத்தையும்   பிரதமர்   நஜிப்   அப்துல்   ரசாக்கையும்      டிஎம்ஐ    அவமதித்து   விட்டதாகக்   குற்றஞ்சாட்டினார்.

அதற்காக   அதன்   உரிமையாளருக்கு   எதிராக   அதிகாரிகள்   விசாரணை   மேற்கொள்ள  வேண்டும்    என்றும்    அவர்    வலியுறுத்தினார்