ஜாஹிட்: பல்முனை போட்டிகள் இருப்பது நல்லது ஆனால் அதிலும் ஆபத்து உண்டு

அம்னோ  பொதுத்  தேர்தலுக்கு   ஆயத்தமாகிக்  கொண்டிருக்கும்   நேரத்தில்   அது  பல்முனைப்  போட்டிகள்  நடப்பதையே   விரும்புகிறது  என    அதன்   நடப்பில்  துணைத்   தலைவர்   அஹ்மட்  ஜாஹிட்  ஹமிடி   கூறினார்.

அது  எதிரணி   வாக்குகளைப்  பிளவுபடுத்தும்,  ஆளும்  கட்சிக்கு   நன்மையாக  அமையும்.

ஆனாலும்,  எல்லா இடங்களிலும்   அது   அம்னோக்குச்   சாதகமாக  அமையும்   என்று   எதிர்பார்க்க   முடியாது    என்றும்   ஜாஹிட்   எச்சரித்தார்.

“பல்முனை  போட்டிகள்    அமையும்   என  எதிர்பார்ப்போம். ஆனால்,  சில  இடங்களில்    அது   நமக்கு   ஆபத்தாகவும்   அமையலாம்.

“சில  தொகுதிகளில்   பல்முனைப்  போட்டி   நமக்குச்   சாதகமாக   அமையாமல்   போகலாம்”. புத்ரா  உலக   வணிக   மையத்தில்   அம்னோ   பேரவைக்  கூட்டத்தின்   முடிவில்   ஜாஹிடி   பேசினார்.

அடுத்த   பொதுத்   தேர்தலில்   பல   இடங்களில்   பிஎன்,  பக்கத்தான்   ஹரபான்,   பாஸ்,  பிஎஸ்எம்    ஆகியவற்றுக்கிடையில்   மும்முனை   போட்டிகள்   நிகழலாம்   என   எதிர்பார்க்கப்படுகிறது.