மலாய்க்காரர்களை அதிகாரத்திலிருந்து ஒதுக்கிவிட ‘மலேசியாவின் மலேசியா ‘வைப் பயன்படுத்தாதீர்

 

“மலேசியன் மலேசியா’ என்ற கருத்தைப் பயன்படுத்துவோரின் நோக்கம் முஸ்லிம்களின் அதிகாரத்தை ஒதுக்கித்தள்ளுவதாகும், ஆகவே. அம்மாதிரியான முயற்சிகளை நிராகரிக்க வேண்டும் என்று பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் கூறுகிறார்.

இஸ்லாம் ஆளுவதை உறுதி செய்வதற்காக பாஸ் தோற்றுவிக்கப்பட்டது என்று கூறும் ஹாடியின் செய்தி பாஸின் ஹரக்கா டெய்லியில் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

இஸ்லாம் ஆளுவதை நிலைநிறுத்துவதற்கான போராட்டத்தின் தொடர்ச்சிதான் பாஸ் கட்சியின் தொடக்கம், இஸ்லாம் ஆளப்படுவதற்காக அல்ல. இஸ்லாம்தான் அதிகாரத்தைக் கொண்டுள்ள ஒன்று, இஸ்லாத்தைப் பலவந்தப்படுத்த முடியாது என்று ஹாடி வெளியிட்டுள்ள ஒரு நீண்ட அறிக்கையில் கூறுகிறார்.

மலேசியன் மலேசியா என்று கருத்தைப் பயன்படுத்தி முஸ்லிம்களின் அதிகாரத்தை ஒதுக்கி வைக்க மேற்கொள்ளப்படும் எந்த முயற்சியையும் பாஸ் நிராகரிக்கிறது என்று கூறிய ஹாடி, இருப்பினும் மலேசியா ஒரு பல்லின சமுதாயம் என்பதை பாஸ் ஏற்றுக்கொள்கிறது என்றார். அதோடு, இஸ்லாம் இன அல்லது சமய வேறுபாடின்றி அனைவருக்கும் நியாயமாக இருக்கிறது என்று அவர் மேலும் கூறினார்.