அடுத்தப் பொதுத் தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் வெற்றி பெற்றால், டாக்டர் மகாதிர் இடைக்காலப் பிரதமராக நியமிக்கப்படுவார் என்ற அக்கூட்டணியின் முன்மொழிதலை அம்னோ தலைவர் நஜிப் ரசாக் ஏளனம் செய்தார்.
அந்த முன்னாள் பிரதமர் மீண்டும் பதவிக்கு வந்தால் பழைய கொள்கைகளைத்தான் கொண்டு வருவார். உங்களுக்கு எதிர்காலத்திற்கான ஒரு கட்சி வேண்டுமென்றால், நீங்கள் கடந்தகாலத்தைச் சேர்ந்த ஒருவரைக் கொண்டு வந்தால், அவர் எதிர்காலத்தைப் பிரதிநிதிக்க மாட்டார் என்றார் நஜிப்.
இளைஞர்கள் சிந்திக்க வேண்டும். கடந்தகால மனிதர் ஒருவரை நீங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது. இது பொருத்தமானதல்ல. அவர் கடந்தகால கொள்கைகளை எதிர்காலத்திற்கு கொண்டு வருவார் என்று இன்று அம்னோ பொதுக்கூட்டத்தில் இறுதி உரையாற்றிய நஜிப் கூறினார்.
ஆனால், இப்போது எனது காலத்தில், மிக வெளிப்படையாக இருக்கிறது. அதிகமான விவாதங்கள் இருக்கலாம் என்று நஜிப் மேலும் கூறினார்.
அதோடு மட்டுமல்ல. மகாதிரின் நண்பர், டிஎபியின் பெரும் தலைவர், லிம் கிட் சியாங் பிரதமராகும் எண்ணத்தைக் கொண்டிருக்கிறார். என்னை நம்பாவிட்டால், ஜாவி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டான் பெங் ஹுவாட்டைக் கேளுங்கள் என்றாரவர்.
அந்த ஜாவி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நேற்று டிஎபியை விட்டு விலகி மாற்று கட்சியில் (பிஎபி) சேர்ந்து கொண்டார்.