சிலாங்கூர் சுல்தானுக்கு எதிராக எந்தத் தவறும் செய்யவில்லை என்கிறார் ஸைட்

 

சிலாங்கூர் சுல்தானிடம் மன்னிப்பு கோருவதற்கான எந்தத் தவறையும் செய்யவில்லை என்று ஸைட் இப்ராகிம் தெரிவித்தார்.

ஸைட் செய்திருந்த டிவிட் இந்த வாரம் நடைபெற்ற அம்னோ ஆண்டுப் பொதுக்கூட்டதில் கடுமையாகத் தாக்கப்பட்டது.

 

நான் தவறு செய்யவில்லை என்று உணருகிறேன். ஒருவர் மன்னிப்பு கேட்கிறார் என்றால், நாம் தவறு செய்திருக்கிறோம். (நடந்தது) ஒரு சிறிய விவகாரம். என்றாரவர்.

தாம் செய்த டிவிட் சிலாங்கூர் சுல்தானுக்கானது என்று கூறிய ஸைட். நான் மன்னிப்பு கோருவதற்கு என்ன தவறு செய்தேன் என்று கோத்தபாரு, புனுட் பாயுங் சட்டமன்ற தொகுதியில் நேற்றிரவு அமனா ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்த பின்னர் அவர் கேள்வி எழுப்பினார்.

நான் ஏதாவது தவறு செய்திருப்பதாகக் கருதப்பட்டால் அதை அதிகாரிகள் முதலில் நிருபிக்க வேண்டும்.

நான் ஏதாவது தவறு செய்திருந்தால் அதை உறுதிப்படுத்த போலீஸ் விசாரணை செய்ய வேண்டும், நீதிமன்றம் அதை செவிமடுக்க வேண்டும், பிறகு முடிவு செய்ய வேண்டும் என்று ஸைட் கூறினார்.

போலீஸ் என்னை விசாரிக்கும். ஆனால் இக்கட்டத்தில் அவர்கள் என்னோடு இன்னும் தொடர்பு கொள்ளவில்லை. அப்போது நான் விளக்கம் அளிப்பேன், பிரச்சனை இல்லை என்று ஸைட் மேலும் கூறினார்.

ஸைட் தேச நித்தனைச் சட்டம் 1948 இன்கீழ் விசாரிக்கப்படுகிறார் என்று நேற்று, போலீஸ் படைத் தலைவர் (ஐஜிபி) முகமட் பூஸி ஹருண் கூறியிருந்தார்.

சிலாங்கூர் சுல்தான் முன்னாள் பிரதமர் மகாதிருக்கு விடுத்திருந்த எச்சரிக்கைக்கு ஸைட் அளித்திருந்த கருத்தை சுல்தான் ஓர் அவமதிப்பாக எடுத்துக் கொண்டு ஸைட் இப்ராகிம் அவரது சொந்த மாநிலமான கிளந்தானுக்கு திரும்பிச் செல்ல வேண்டும் என்று கூறினார்.