சிலாங்கூர் சுல்தானுடன் ஏற்பட்டுள்ள குழப்பமன சூழ்நிலைக்கு காரணமான முன்னாள் சட்டத்துறை அமைச்சரும் டிஎபியின் உறுப்பினருமான ஸைட் இப்ராகிம்மை டிஎபியிலிருந்து வெளியேற்றுமாறு சிலாங்கூர் அம்னோ-பிஎன் தலைவர் நோ ஒமார் டிஎபிக்கு சவால் விட்டார்.
டிஎபி கூறியிருப்பது போல, அக்கட்சிக்கும் சிலாங்கூர் சுல்தான் பற்றி ஸைட் இப்ராகிம் கூறியதற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லையென்றால், ஸைட்டை டிஎபியிலிருந்து விலக்குமாறு நாங்கள் சவால் விடுகிறோம் என்று நோ இன்று காலையில் ஷா அலாமில் நடைபெற்ற ‘டவ்லாட் துவாங்கு’ ஒற்றுமை பேரணியில் பங்கேற்றிருந்தவர்களிடம் கூறினார்.
கடந்த வெள்ளிக்கிழமை, சிலாங்கூர் டிஎபியின் தலைவர் டோனி புவா, ஸைட் இப்ராகிம் சிலாங்கூர் சுல்தான் பற்றி தெரிவித்திருந்த கருத்துக்கும் டிஎபிக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்று கூறியிருந்ததை நோ ஒமார் குறிப்பிட்டார்.