நேற்று இரவு, ஸைட் இப்ராகிம்மை மிரட்டியதற்காக, கைது செய்யப்பட்ட 1மலேசியா அரசு சார்பற்ற இயக்கங்களின் தலைவர், ஜமால் முகமட் யூனுஸ், இன்று தொடக்கம் இரண்டு நாள்களுக்குத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்.
சுங்கை பெசார் அம்னோ தலைவரான அவர் 2 நாள்களுக்கு தடுத்து வைக்கப்பட்டு, செக்ஷன் 504-ன் கீழ் விசாரிக்க, மாஜிஸ்திரேட் உம்ஷாருல் அன் நூர் உமார் அனுமதியளித்துள்ளதாக பெரித்தா ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.
டாங் வாங்கி மாவட்டப் போலிஸ் தலைவர், ஏசிபி ஷஹாருட்டின் அப்துல்லா இத்தகவலை உறுதிபடுத்தினார்.
நேற்றிரவு, 8 மணியளவில் ஜமால் யூனுஸ் புத்ரா உலக வாணிப மையத்தின் பிரதான நுழைவாயிலில் கைது செய்யப்பட்டார்.
முன்னதாக, சிலாங்கூர் சுல்தானை விமர்சித்த அந்த டிஏபி உறுப்பினரின் அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் , ஜாமால் தனது ஆதரவாளர்கள் சிலருடன் ஸைட்டின் உருவப் பொம்மையைச் சுத்தியலால் அடித்தார்.
தடுப்புக்காவல் அவர் வீட்டில் தானே! பயப்பட ஒன்றுமில்லை!