பேங்க் நெகாரா அடைந்த நட்டம்: நஜிப்பின் கீழ் ரிம161 பில்லியன், மகாதிரின் கீழ் ரிம31 பில்லியன்

 

தாம் நாட்டை வழிநடத்திய காலத்தில் பேங்க் நெகாரா அடைந்த நட்டத்தைவிட நஜிப்பின் கீழ் அது அடைந்த நட்டம் மிக மிக அதிகம் என்று கூறுகிறார் மகாதிர்.

ஒப்பிட்டு பாருங்கள்: நஜிப்பின் கீழ் பேங்க் நெகாரா அடைந்த நட்டம் யுஎஸ்$39.621 பில்லியன் (மலேசிய ரிங்கிட் 161 பில்லியன்). மகாதிரின் கீழ் பேங்க் நெகாரா அடைந்த நட்டம் ரிம31 பில்லியன்.

தமது காலத்தில் பேங்க் நெகாரா அந்நியச் செலாவணி சந்தையில் மேற்கொண்ட நடவடிக்கையில் நட்டம் அடைந்தது. அந்த நடவடிக்கையிலிருந்து நாம் ரிம30 மில்லியனை இழந்தோம் என்று கூறுகிறார் மகாதிர்.

“ஆனால் மிக அண்மையில், 2013 லிருந்து 2015 வரையில், பேங்க் நெகாரா அதைவிடக் கூடுதலாக இழந்துள்ளது. உண்மையில், அது யுஎஸ்$39.6 பில்லியன், அது சுமார் ரிம160 பில்லியன் ஆகும். ஆனால், இதற்கு விசாரணை இல்லை, அரச விசாரணை ஆணையம் (ஆர்சிஐ) இல்லை. அதற்கு நாடாளுமன்றத்தில் அளிக்கப்பட்ட பதில் திருப்திகரமானதாக இல்லை”, என்று கிளப் சி டெட் முகநூல் பக்கத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ள வீடியோ செய்தியில் மகாதிர் கூறுகிறார்.