சிரிக்க வைத்தவருக்கு வருத்தம் தெரிவிக்காத நடிகர்கள்

சென்னை: நாடக ஆசிரியர், நடிகர், வசனகர்த்தா... இப்படி பன்முகம் கொண்டவர் கிரேஸி மோகன் இரு நாட்களுக்கு முன் மாரடைப்பால் திடீரென காலமானார். அவரது மறைவு குறித்து உலகெங்கிலும் உள்ள திரைப்பட ரசிகர்கள் பலரும் அவர்களது இரங்கலை சமூக வலைத்தளங்கள் மூலம் வெளியிட்டனர். பலர், கிரேஸி மோகனின் நகைச்சுவை வசனங்களை…

கேரளாவில் கடும் வீழ்ச்சியில் தமிழ் படங்கள்!

தமிழ் சினிமா தமிழ்நாடு தாண்டி கேரளா, கர்நாடகா, ஆந்திரா என பல பகுதிகளில் மார்க்கெட் உள்ளது. அதிலும் ரஜினி, விஜய், சூர்யா, அஜித் போன்ற நடிகர்களுக்கு தென்னிந்தியாவில் அனைத்து இடங்களிலும் மார்க்கெட் உள்ளது. இதில் கேரளாவில் விஜய்க்கு இருக்கும் மார்க்கெட் மோகன்லாலுக்கு இணையானவை, ஆனால், சமீபத்தில் வந்த எந்த…

கிரிஷ் கர்னாட்: ஓய்ந்தது இந்தியாவின் பன்முகத்தன்மைக்கும், மொழி உரிமைக்கும் ஒலித்த…

நாடக ஆசிரியர், நடிகர், இயக்குனர்,இலக்கியவாதி, தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் என பல முகங்கள் கொண்ட கிரிஷ் கர்னாட், தனது 81 வது வயதில் இன்று காலமானார். தமிழ் திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரமாக வலம் வந்த இவர், வில்லன் நடிகர் என்ற வட்டத்திற்குள் சுருக்கிவிடக் கூடியவர் அல்ல, இந்திய சினிமா…

திடீரென உயிரிழந்த பிரபல திரைப்பட நடிகர் கிரிஷ் கர்னாட்

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என பல மொழிகளில் நடித்து தன் திறமையை வெளிப்படுத்தியவர் நடிகர் கிரிஷ் கர்னாட். பெங்களூரில் வசித்துவந்த இவர் இன்று காலை தனது வீட்டில் உயிரிழந்துள்ளார். 81 வயதான இவர் உடல் உறுப்பு செயலிழப்பு பிரச்சனையால் சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். இன்று காலை இவரது…

வசனத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்த கிரேஸி மோகன் உயிரிழந்தார், அதிர்ச்சியில்…

சினிமாவில் எல்லா துறையிலும் இருக்கும் கலைஞர்களுக்கு அவர்களுக்கு என்று ஒரு ஸ்டைல் இருக்கும். அப்படி வசனங்களில் ஒரு தனி வழி அமைத்து அதில் வெற்றியும் கண்டவர் கிரேஸி மோகன் அவர்கள். இவர் கமல்ஹாசன் நடிக்க இருந்த சபாஷ் நாயுடு படத்திற்கும் வசனம் எழுதுவதாக இருந்தார். இந்த நிலையில் இன்று…

கொலைகாரன் – சினிமா விமர்சனம்

ஜப்பானிய எழுத்தளரான கெய்கோ ஹிகஷினோ எழுதி 2005ல் வெளியான The Devotion of Suspect X நாவல் மிகப் புகழ்பெற்ற ஒரு த்ரில்லர். இந்த நாவல் 2008ல் Suspect X என்ற பெயரில் திரைப்படமாகவும் வெளிவந்து பெரும் வெற்றிபெற்றது. இந்தப் படம் உலகம் முழுவதும் பல மொழிகளில் தழுவி…

நடிகர் திலகம் சிவாஜிக்கு இத்தனை வருடங்கள் கழித்து கிடைத்த மாபெரும்…

நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு நிகர் அவர் தான். அவரை பார்த்து நடிகராக ஆசைப்பட்டவர்கள், ஆசைப்படுபவர்கள் பலர். நடிக்க வருபவர்களும் அவர் நடித்த காட்சிகளை நடித்துக் காட்டும் வழக்கம் இன்று வரை உள்ளது. இந்நிலையில் சிவாஜி கணேசனுக்கு தமிழக அரசு கவுரவம் செய்துள்ளது. பள்ளிப் பாடத்தில் சிவாஜி கணேசனை…

இளையராஜா பாடல்களுக்கு கட்டணம் எவ்வளவு? வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ

தனது பாடல்களை தனது அனுமதியின்றி பாடுவதற்கும் நிகழ்ச்சிகளில் வாசிக்கப்படுவதற்கும் தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் இளையராஜா மனு அளித்திருந்தார். இதனை விசரித்த நீதிமன்றம், இளையராஜா அனுமதியின்றி அவர் இசைத்த பாடல்களை வேறு யாரும் பயன்படுத்த சமீபத்தில் தடை விதித்தது. இந்நிலையில் தன் பாடலுக்கான, ராயல்டி என்ற…

நேசமணி குறித்து வடிவேலு: ‘ரூம் போட்டு சிந்திச்சா கூட இப்படி…

#Pray_for_Nesamani என்கிற ஹேஷ்டேக் ஒரே நாளில் சர்வதேச அளவில் டிரண்ட் ஆனது. சமூக வலைதளங்களில் அதுவே பேசுபொருளாகவும் மாறிவிட்டது. இந்நிலையில் 18 வருடங்களுக்கு முன் வந்த திரைப்படத்தின் கதாபாத்திரம் தற்போது டிரண்ட் ஆனது குறித்து தனது கருத்துக்களை பிபிசி தமிழ் செய்தியாளர் மரிய மைக்கேலுடன் பகிர்ந்து கொண்டார் நடிகர்…

என்.ஜி.கே. (நந்த கோபாலன் குமரன்): சினிமா விமர்சனம்

இரண்டாம் உலகம் படம் வெளிவந்து ஆறு வருடங்களுக்குப் பிறகு செல்வராகவன் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் படம் இது. ஒரு மாஸ் ஹீரோவை வைத்து உருவாக்கியிருக்கும் முதல் படமும்கூட. ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த என்.ஜி.கே. எனப்படும் நந்த கோபாலன் குமரன் (சூர்யா) ஊரில் இயற்கை விவசாயம் செய்துவருகிறார். ஊரில் உள்ள இளைஞர்களைத் திரட்டி,…

ரஜினி, அஜித் படங்களுக்கு 60%: தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்திற்கு பாரதிராஜா…

சென்னை: தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ள விகிதாச்சார முறையை எச்சரித்து பாரதிராஜா அறிக்கை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, என் இனிய தமிழ் மக்களே! தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு ஒரு சரியான தலைமை இல்லாத சூழ்நிலையில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களின் எதிர்காலத்தை…

இதை மட்டும் செய்வீங்களா ராஜா சார்?: இளையராஜாவுக்கு ஒரு வேண்டுகோள்

சென்னை: இசைஞானி இளையராஜாவுக்கு ரசிகர்கள் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளனர். விஜய் சேதுபதி, த்ரிஷா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான 96 படத்தில் தனது பாடல்களை பயன்படுத்தியதற்கு இசைஞானி இளையராஜா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தற்போதுள்ள இசையமைப்பாளர்கள் தன் பாடல்களை பயன்படுத்துவது அவர்களின் ஆண்மையில்லாத்தனத்தை காட்டுகிறது என்று அவர் விமர்சித்தார்.…

நடித்தும், இசையமைத்தபோதும் கிடைக்காத சந்தோஷம் இதில் தான் கிடைக்கிறது’ –…

இசையமைப்பாளர் மற்றும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமார் தற்போது சசி இயக்கத்தில் உருவாகும் ”சிவப்பு மஞ்சள் பச்சை” படத்தில் நடித்து வருகிறார். மேலும் இயக்குனர் எழில் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து கொண்டே சூர்யா, தனுஷ் நடிக்கும் படங்களுக்கும் இசையமைத்து வரும் இவர் வேலைகளின் நடுவே சமூகம் சார்ந்த…

பழசை மறந்து ஒன்று சேர்ந்த இளையராஜா, எஸ்.பி.பி.

சென்னை: இளையராஜாவுடன் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மீண்டும் சேர்ந்துள்ளது ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி அளித்துள்ளது. இசைஞானி இளையராஜாவின் இசையில் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பாடிய பாடல் அனைத்துமே அருமை. அவர்களின் கூட்டணி என்றுமே வெற்றிக் கூட்டணி. இந்நிலையில் அவர்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டு பிரிந்தனர். தான் இசையமைத்த பாடல்களை எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பாடக்…

“இது ஆண்மையில்லாத் தனம்”.. 96 பட இசையமைப்பாளரை அசிங்கமாகத் திட்டிய…

சென்னை: 96 படத்தில் தன்னுடைய பாடல்களைப் பயன்படுத்தியது ஆண்மையில்லாத் தனம் என இளையராஜா திட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் மாபெரும் வெற்றி பெற்ற படம் 96. காதலை மையப்படுத்தி உருவாகியிருந்த இந்தப் படத்தில் ராம் என்ற கதாபாத்திரத்தில் விஜய் சேதிபதியும்,…

தேர்தல் தோல்வி – நடிகர் பிரகாஷ்ராஜ் எடுத்துள்ள அதிரடி முடிவு!

விரைவில் புதிய அரசியல் கட்சியை தொடங்க உள்ளதாக நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார். நடிகர் பிரகாஷ்ராஜ் சமீப காலமாக பிரதமர் மோடியை விமர்சனம் செய்து வந்தார். இந்த நிலையில் அவர் பாராளுமன்ற தேர்தலில் பெங்களூர் மத்திய தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டார். இந்த தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் பி.சி. மோகன்…

முகத்தில் பலமான அடி, அவமானம், கேலி! நடிகர் பிரகாஷ் ராஜ்…

தமிழ் சினிமாவில் தன் தனி நடிப்பு திறமையால் பலரின் மனங்களை கொள்ள கொண்டவர் பிரகாஷ் ராஜ். ஹே செல்லம் என அவர் கில்லி படத்தில் சொல்லும் வார்த்தை அவருக்கே அடைமொழியாகிவிட்டது. சில கிராமங்களை தத்தெடுத்து பல நலத்திட்ட உதவிகளை அங்குள்ள மக்களுக்கு செய்து வந்தார். நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற…

ஹிந்தி ‘காஞ்சனா’… ராகவா லாரன்ஸ் வெளியேறியது குறித்து படக்குழு விளக்கம்

காஞ்சனா 3 வெளியாகுவதற்கு முன்பே ராகவா லாரன்ஸ் இந்தி சினிமாவிற்குள் நுழைகிறார் என்ற தகவல் வெளியாகிய நிலையில் அது உண்மையாகும் படி காஞ்சனாவின் இந்தி மேக்கிங் தொடங்கி நடைபெற்றது. ஃபர்ஸ்ட் லுக் வெளியான நிலையில் அந்த படத்திலிருந்து தற்போது வெளியேறிவிட்டதாக ராகவா லாரன்ஸ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அக்‌ஷய் குமார் நடிக்க…

மான்ஸ்டர் திரைவிமர்சனம்

படங்களின் கதை எப்படி இருந்தாலும் சரி என்ற மனப்பாங்கு சில நேரங்களில் வந்தபோதிலும் சில நடிகர்கள், இயக்குனர்களுக்காகவே படத்திற்கு போக வேண்டும் என்ற எண்ணம் வரும். அப்படியான ஈர்ப்பை இப்படம் பெற்றுள்ளது Sj.சூர்யா நடிப்பில் வந்துள்ள மான்ஸ்டர். படம் என்ன சொல்கிறது என பார்க்கலாம்.. வாருங்கள்... கதைக்களம் படத்தின்…

Mr. Local: சினிமா விமர்சனம்

'கனா' படத்திற்குப் பறகு சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் படம். 'வேலைக்காரன்' படத்திற்குப் பிறகு, இந்தப் படத்தில் மீண்டும் நயன்தாராவுடன் இணைந்து நடித்திருக்கிறார் சிவகார்த்திகேயன். 'பாஸ் என்கிற பாஸ்கரன்' படத்தை இயக்கிய எம். ராஜேஷ் இயக்கியிருக்கும் படம். இப்படி பல எதிர்பார்ப்புகளுடன் படத்தில் போய் அமர்ந்தால், ரசிகர்களை இப்படியா ஏமாற்றுவது? ஒரு…

வீடும் கட்டிக் கொடுத்து, கிரகப் பிரவேசமும் செய்து தந்த ராகவா…

சென்னை: தனது ஒவ்வொரு படத்தின் ரிலீசுக்கு பிறகும், கஷ்டத்தில் இருக்கும் குழந்தைகளை சந்தித்து அவர்களுக்கு தேவையானதை செய்து கொடுக்க உள்ளதாக நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார். நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ், சினிமா தவிர்த்து சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து…

அயோக்யா: சிக்கல்களைத் தாண்டி இன்று வெளியானது; நடந்தது என்ன?

வெள்ளிக்கிழமையன்று வெளியாவதாக இருந்த விஷால் நடித்த அயோக்யா, அதர்வா நடித்த 100 ஆகிய படங்கள் இன்றுதான் வெளியாகியுள்ளது. பணம் சார்ந்த பிரச்சனைகளால் நேற்று படம் வெளியாகாததற்குக் காரணம் என சொல்லப்பட்டது. கோடை விடுமுறையாக இருப்பதால் இந்த வாரம் பல முக்கியமான திரைப்படங்கள் வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. விஷால் நடித்த அயோக்யா,…

என் படத்தையும் பாருங்க! தியேட்டர் வாசலில் கெஞ்சிக் கெஞ்சி டிக்கெட்…

விஷாலின் அயோக்யா படம் ரிலீஸாகவில்லை. ஜீவாவின் கீ மதியம் ரிலீஸானது. எங்கு சென்றாய் என் உயிரே, உண்மையின் வெளிச்சம், வேதமானவள், காதல் முன்னேற்றக் கழகம் ஆகிய படங்களும் இன்று வெளியாகின. இந்நிலையில் எங்கு சென்றாய் என் உயிரே படத்தின் தயாரிப்பாளரும், இயக்குநருமான ஆர்.வி. பாண்டி தியேட்டர் வாசலில் நின்று…