நடிகர்: கமல்ஹாசன் , விஜய்சேதுபதி, பகத் பாசில், இயக்குனர்: லோகேஷ் கனகராஜ், இசை: அனிருத், ஓளிப்பதிவு: கிரிஷ் கங்காதரன்
போதை தடுப்பு அதிகாரிகள் வரிசையாக முகமூடி அணிந்த கும்பலால் கொல்லப்படுகின்றனர் . படத்தின் நாயகனான கமல்ஹாசனின் மகனை தொடர்ந்து கமலும் அந்த கும்பலால் கொல்லப்படுகிறார்.
இதைவிசாரிக்க சிறப்பு படை அதிகாரியாக பாசில் மற்றும் அவர் குழிவினர் விசாரணை மேற்கொள்கின்றனர். இந்த விசாரணையில் முகமூடி அணிந்த கும்பலை கண்டுபிடித்தார்களா என்பதுதான் கதை..,
இந்த கதையின் முக்கிய திருப்பமாக 1980 – களில் இரகசிய ஏஜெண்டுகளுக்கு இதில் சம்மந்தம் இருப்பதாக கண்டுபிடிக்கிறார் பாசில். 1986 -இல் வெளிவந்த விக்ரம் படத்தின் அடுத்த பகுதிபோல் படம் நகர்கிறது.
மகனை இழந்து குடி, போதை பழக்கத்திற்கு அடிமையான தந்தையாகவும், மறுபக்கம் இதய நோயில் இருக்கும் தனது பேரனுக்காக எதையும் செய்யக்கூடிய ‘கர்ணன்’ என்ற அன்பு தாத்தாவுகவும், படத்தின் ஆரம்பத்தில் அவருக்கான பாணியில் நடனமும், தனது பேரன் தலைமுறையினர் போதைமருந்தில்லா சூழலில் வாழ வேண்டும் என்ற 60 வயது குடும்பத்தை இழந்த நபராக நடித்துள்ளார் கமலஹாசன். சண்டைக்காட்சியில் இளம் நடிகர்களுக்கு நிகராக அசத்தியுள்ளார். உலகநாயகனே என்று கூச்சலிடும் அளவுக்கு திரையில் அவர் நடிப்பு பிரமாதமாக உள்ளது.
கதாநாயகன் மட்டுமே முழுப்படத்தில் காட்டாமல், இளம் தலைமுறையினருக்கும் நிறைய காட்சிகளை வழங்கியுள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். கமலின் தீவிர ரசிகனா இவர் இந்தப்படத்தை பழிவாங்கும் கதையாக மட்டுமில்லாமல் சமூகத்திற்கு போதைப்பொருள் மிகவும் கொடியது என்ற கருத்தை முன் நிறுத்தி கமலுக்கு சிறந்த ‘கம்பேக்’ படத்தை தந்துள்ளார்.தனது மற்றோரு படமான ‘கைதி’ யின் தொடர் காட்சிகள் அமைவதுபோல் எடுத்திருப்பது, கைதி படத்தை பார்க்கத்தவர்களுக்கு சிறு குழப்பத்தை ஏற்படுத்தலாம். அதைத்தவிர இது வெற்றி படம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
பாசிலின் எதார்த்தமான நடிப்பும், விசாரணையில் மிரட்டும் பார்வையும், அழுத்தமான நடிப்பும் முதல் பாதியில் படத்தை வேகமாகவும், கமலுக்கு ஈடுகொடுக்கும் விதமாக அமைந்துள்ளது. இவருக்கு மனைவியாக இளம் நாயகி காயத்ரி நடித்துள்ளார்.
பாசிலின் விசாரணையில் போதைப்பொருள் தலைவனாக சந்தனம் என்ற பெயரில் விஜய் சேதுபதியை சந்திக்கிறார்.
விஜய் சேதுபதி பகலில் டாக்டர் , இரவில் போதைப்பொருள் தயாரிப்பவர் மற்றும் மூன்று மனைவி, 60 – க்கும் மேற்பட்ட குடும்ப உறுப்பினர்களுடன் பெரிய போதைப்பொருள் சாம்ராஜியத்தை நடத்திவருகிறார். மிக கொடூரமாக கொலைகளை செய்யும் இவர் ரோலக்ஸ் என்ற பெயரை கேட்டால் நடுங்குபவராகவும் தனது குடும்பத்தை காப்பாத்துவதற்காக கோடிக்கணக்கில் தொலைந்துபோன தனது போதைப்பொருட்களை தேடி வருகிறார். பார்க்கும் ரசிகர்கள் வெறுக்கும் அளவிற்கு வில்லனாக இப்படத்தில் தனக்கென பெரிய இடத்தை தக்கவைத்துள்ளார், பெரிய சண்டைகாட்சிகள் இவருக்கு இல்லாமல் போனாலும் கடைசியில் முகமூடி கும்பலையும் , கமலையம் அடித்து மூஞ்சியை உடைத்துள்ளார்.
இரண்டு பாடல்களை மட்டும் கொண்டுள்ள இப்படத்தில் அனிருத்தின் இசை அற்புதம்.
ரீடா என்று படத்தில் பெண் அதிகாரியின் சண்டைகாட்சி பார்ப்பவர்களை அவர் ரசிகரகர்களா மாற்றியுள்ளது. சில இடங்களில் காமெடி காட்சி கமல் பட பாணியில் அமைந்துள்ளது.
இப்படி கமலஹாசன், பாசில்,விஜய்சேதுபதி இவர்களுடன் கடைசி 10 நிமிடங்கள் சந்தனத்தின் தலைவன் ரோலக்ஸாக சிறப்பு தோற்றத்தில் மிரட்டுகிறார் சூர்யா. திரையரங்கத்தயே அதிரவைக்கும் சிறந்த ஆக்க்ஷன் படம்.
மொத்தத்தில் விக்ரம் ஒரு ‘வெறித்தனம்’