துணிவு

நடிகர்கள் : அஜித், மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி

இயக்கம்: ஹெச். வினோத்

துணிவு படத்தின் இரண்டாம் பாதியில் வரும் ஒன்று இரண்டு எபிசோடுகளை தனியாகக் காட்டினால் இது ஷங்கர் படம் என்று நினைக்கத் தோன்றும். ஹீரோ ஒரு மிஷனில் இருப்பதை காட்டும் ஃபிளாஷ்பேக்கை பார்த்தால் ஷங்கர் பட ஃபீலிங் வருகிறது. ஆனால் ஷங்கர் போன்று தன் கதாபாத்திரங்களை முதலில் விவரித்துவிட்டு கதைக்குச் செல்ல ஹெச். வினோத் விரும்பவில்லை.

முதல் சில காட்சிகளிலேயே கதைக்குள் சென்றுவிடுகிறது படம். அதனால் எடுத்த எடுப்பிலேயே வங்கி கொள்ளையைப் பார்க்கிறோம்.

ஹேர் ட்ரையர் பிரஷ் மூலம் சரியான ஹேர் ஸ்டைலைப் பெறுங்கள், ஈரமான முடியை உலர்த்துவதற்கு எளிதாக இருக்கும்

கேங்ஸ்டர் ராதா(வீரா) மற்றும் அவரின் ஆட்கள் ஒரு வங்கியைக் கொள்ளையடிக்க திட்டம் போடுகிறார்கள். ஆனால் வங்கிக்குச் சென்று பார்த்தால் அங்கு ஏற்கனவே ஒரு மார்க்கமான ஆள்(அஜித் குமார்) கொள்ளையடிக்க வந்தது தெரிய வருகிறது.

போலீஸ் கமிஷனர்(சமுத்திரக்கனி) கூட அந்த நபரைப் பிடிக்க என்ன செய்வது என்று யோசிக்கிறார். யார் இந்த நபர் என்பது தான் பெரிய கேள்வி.

துணிவு படத்தின் ஹைலைட்டே அதன் வேகம் தான். ஒரு காட்சியிலிருந்து மற்றொரு காட்சிக்குப் படுவேகமாகச் செல்கிறது கதை. ஒரு வேளை எடிட்டர் விஜய் படத்தை ஸ்பீடாக ஓடவிடுகிறாரோ என்று கூட நினைக்கத் தோன்றுகிறது. வேகம் குறைய நேரம் எடுக்கிறது.

படத்தில் நிறைய தகவல்களைக் கொடுத்திருக்கிறார் வினோத். நிதி மோசடிகள் எப்படி நடக்கிறது என்பது முதல் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் வாடிக்கையாளர்களின் பணம் வங்கியில் போடும்போது என்ன ஆகிறது என்பது வரை நிறைய தகவல் அளித்திருக்கிறார்.

அதில் சில தகவல்கள் நேராக நம் தலைக்குள் வேகமாகச் செல்கிறது. அஜித் ஹீரோயிசம் செய்யாமல் வில்லத்தனம் செய்யும் காட்சிகள் தான் படத்தின் பெரிய பலம். அஜித் வில்லத்தனம் செய்யும் காட்சிகளில் தியேட்டரில் விசில் பறக்கிறது.

மஞ்சு வாரியருக்கு சில ஆக்ஷன் காட்சிகள் கிடைத்திருக்கிறது. அதிலும் ஒரு காட்சியில் மாஸ் காட்டியிருக்கிறார். சமுத்திரக்கனி உள்பட பிற நடிகர்களுக்குப் பெரிதாக வேலை இல்லை. அஜித்துக்கு டஃப் கொடுக்கும்படி வில்லன்கள் இல்லாதது தான் பெரிய மைனஸ். சப்பை வில்லன்கள் என்று சொல்லலாம். சில இடங்களில் ஸ்டண்ட் காட்சிகள் நம்பும்படியாக இல்லை.