நடிகர்கள்:தனுஷ், எல்லி அவ்ரம், யோகி பாபு
இயக்கம்: செல்வராகவன்
கதிர், பிரபு என்கிற இரட்டை சகோதரர்களுடன் படம் துவங்குகிறது. அதில் ஒருவர் மனநலம் சரியில்லாதவர். மோசமான பெற்றோர், சைக்கோ கடத்தல்காரரிடம் சிக்கியதால் நிலைமை மேலும் மோசமாகிறது. கமல் ஹாசனின் ஆழவந்தான் கண் முன்பு வந்து போகிறது.
பிரபு(தனுஷ்), அவரின் மனைவி புவனா(இந்துஜா), மகள் சத்யாவை(ஹியா)காட்டுகிறார்கள். எல்லாம் நன்றாகச் சென்று கொண்டிருக்கிறது. பிரபுவைப் பார்த்து அவரின் சக ஊழியரான குணா (யோகி பாபு)பொறாமைப்படுகிறார். அதன் பிறகு அனைத்தும் மாறுகிறது.
நள்ளிரவில் சத்யா யாருடனோ பேசுவதை பார்க்கிறார் பிரபு. சத்யாவுக்கு ஏதாவது ஆகிறதா இல்லை அவர் சொல்வது போன்று அமானுஷ்ய சக்தியுடன் பேசுகிறாரா என்பது அவருக்குப் புரியவில்லை.
வழக்கம் போன்று இல்லாமல் இந்தக் காட்சிகளைச் சாதாரணமாக எடுத்திருக்கிறார் செல்வராகவன். யுவன் ஷங்கர்.
விஷயம் சீரியஸாகும்போது செல்வராகவனும் சீரியஸாகிறார். இடைவேளையை நெருங்கும்போது இருக்கையின் நுனிக்கே நம்மை வர வைத்துவிடுகிறார்.
சைக்கோ கொலையாளியான கதிர் வரப் போகிறார் என்று பெரிதாக எதிர்பார்க்கும்போது இரண்டாம் பாதி ஏமாற்றுகிறது. செல்வராகவனின் உலகத்திலிருந்து சைக்கோ கொலையாளியின் உலகிற்கு செல்கிறோம். அடுத்து நடப்பதை எளிதில் கணிக்க முடிகிறது. படம் சுவாரஸ்யம் இழக்கிறது.
துணை கதாபாத்திரங்களுக்குப் பெரிதாக வேலை இல்லை. கதிர், பேச முடியாத அவரின் மனைவி மாதுரி(எல்லி அவ்ரம்), அவர்களின் இரட்டையர் மகன்கள் என்று பிளாஷ்பேக் செல்கிறது. கிளைமாக்ஸ் தான் பெரும் ஏமாற்றம் அளிக்கிறது.