‘நாய் சேகர்’ 

நடிகர்: சதிஸ் நடிகை: பவித்ரா லட்சுமி டைரக்ஷன்: கிஷோர் ராஜ்குமார் இசை : அஜீஷும் மற்றும் அனிருத் ஒளிப்பதிவு : பிரவீன் பாலுமனிதனும் நாயும் தங்களின் DNA-க்களைக் கூடுமாற்றிக்கொண்டால் என்ன நடக்கும் என்பது தான் பேண்டஸி சயின்ஸ் பிக்‌ஷன் படமான நாய் சேகரின் ஒன்லைன்.

படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை பார்வையாளர்களை சிரிக்க வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் எடுக்கப்பட்டிருக்கும் படம்.

ஜார்ஜ் மரியான், ஒரு விஞ்ஞானி. ஒரு நாயையும், பூனையையும் ஒன்று சேர்த்து புதிய மரபணுவை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார். அந்த நாய், கதாநாயகன் சதீசை கடித்து விடுகிறது. இதனால் சதீசுக்கு நாய் குணம் வந்து விடுகிறது. நாய்க்கு சதீசின் குணம் வந்து விடுகிறது.

‘‘15 நாட்களுக்குள் சிகிச்சை எடுத்துக்கொள்ளாவிட்டால், இறந்து போய் விடுவாய்’’ என்று சதீசை விஞ்ஞானி ஜார்ஜ் மரியான் பயமுறுத்துகிறார். அதுவரை நாய் உயிருக்கு ஆபத்து ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறார்.

பயந்து போன சதீஷ், நாயை தேடி அலைகிறார். அப்போது அவர் சந்திக்கும் காதல், மோதல், சர்ச்சைகள்தான் கதை.

கதையின் நாயகனாக இதுவரை பார்த்திராத சதீஷ். வசனம் மற்றும் உடல் மொழியால் சிரிக்க வைக்கிறார். அவருடைய காதலியாக பவித்ரா லட்சுமி. அதிக வேலை இல்லாத கதாபாத்திரத்தில் அவ்வப்போது வந்து போகிறார்.

சதீசுக்கும், பவித்ரா லட்சுமிக்கும் சமமான கதாபாத்திரத்தில் ஒரு நாய் நடித்து இருக்கிறது. நீண்ட இடைவெளிக்குப்பின் இசையமைப்பாளர் கணேஷ். பாட்டுப்பாடிக் கொண்டே கொலை செய்யும் சிரிப்பு தாதாவாக- வித்தியாசமாக தெரிகிறார்.

லிவிங்ஸ்டன், ஸ்ரீமன், இளவரசு, ஞானசம்பந்தம், நித்யா, வினோதினி ஆகியோரும் இருக்கிறார்கள்.

கிசோர் ராஜ்குமார் இயக்கியிருக்கிறார். இடைவேளை வரை படத்தில் வேக குறைவு. படம் பார்ப்பவர்களை சிரிக்க வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் டைரக்டர் கிசோர் ராஜ்குமார் வெற்றி பெற்று இருக்கிறார்.

dailythanthi