தி லெஜண்ட் 

நடிகர்கள்:சரவணன் அருள், ஊர்வசி ரவ்தெலா, விவேக், ரோபோ ஷங்கர்

இயக்கம்: ஜேடி-ஜெர்ரி

உலக பிரபலமான விஞ்ஞானியான டாக்டர் சரவணனை(லெஜண்ட் சரவணன்) சுற்றி கதை நகர்கிறது. ஆன்டிபயாடிக்ஸ் துறையில் புரட்சி செய்த டாக்டர் சரவணன் தன் மக்களுக்காகக் கிராமத்தில் இருந்தே வேலை செய்கிறார்.

நீரிழிவால் அவதிப்பட்டு வந்த சரவணனின் நண்பர்(ரோபோ ஷங்கர்) இறந்துவிடவே, அந்த நோய்க்கு மருந்து கண்டிபிடிக்க முடிவு செய்கிறார். ஆனால் சரவணனின் முந்தைய ஆராய்ச்சிகளால் பாதிக்கப்பட்ட ஃபார்மா மாஃபியாவுக்கு இது பிடிக்கவில்லை.

அதனால் சுமன், ராகுல் தேவ் உள்ளிட்டோரை வைத்து அவருக்குத் தனிப்பட்ட முறையில் இழப்பை ஏற்படுத்திச் சரவணனின் ஆராய்ச்சியை நாசம் செய்ய முடிவு செய்கிறார்கள். இதை எல்லாம் தாண்டிச் சரவணன் சாதிப்பாரா என்பது தான் கதை.

சரவணன் ஹீரோவாக நடித்திருப்பதாலேயே தி லெஜண்ட் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஒரு ஹீரோவாக அவர் சண்டை போட்டுள்ளார், ரொமான்ஸ் செய்திருக்கிறார், டான்ஸ் ஆடியிருக்கிறார், பன்ச் வசனங்கள் பேசியிருக்கிறார், எமோஷனலாக நடித்திருக்கிறார்.

ஆனால் முகத்தில் அந்த அளவுக்கு அவை தெரியவில்லை. சரவணனுக்கு ஓவர் மேக்கப் போட்டுள்ளனர். ஊர்வசி ரவ்தெலா அழகாக இருக்கிறார். யோகி பாபுவின் காமெடியால் சிரிப்பு வரவில்லை.

படத்தில் வரும் அனைத்து கதாபாத்திரங்களின் உடையும் ரசிகர்களின் கவனத்தை பெற்றிருக்கிறது.

திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் லெஜண்ட் வேற லெவலில் இருந்திருக்கும்.