ஏஜிபி

நடிகை – லட்சுமி மேனன்

இயக்குனர் – ரமேஷ் சுப்ரமணியன்

இசை – ஜெயகிரிஷ்

ஓளிப்பதிவு – சந்தோஷ் பாண்டி

ஒரு விபத்தில் தன்னுடைய குடும்பத்தை இழந்த நாயகி லட்சுமி மேனன், அவருடைய அக்கா மகளுடன் வாழ்ந்து வருகிறார். ஒருவரை காதலித்து வரும் நாயகி, தன்னுடைய காதலனுக்கு ஏற்பட்ட சிறிய காயத்தால் அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறார்.

அங்கு சிகிச்சை பெற்ற பிறகு அவர் மருத்துவமனையில் இருந்து காணாமல் போகிறார். பதறி போகும் லட்சுமி மேனனுக்கு மருத்துவமனையில் விசாரித்தால், அப்படி ஒரு சம்பவம் நடைபெறவில்லை என்று கூறுகின்றனர். இறுதியில் லட்சுமி மேனன், தொலைந்த தன் காதலனை கண்டுபிடித்தாரா? இல்லையா? அவருக்கு என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.

நாயகியாக நடித்திருக்கும் லட்சுமி மேனன், ஸ்கிசோபெரினியா எனும் மனநோயால் பாத்திக்கப்பட்ட கதாப்பாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். அவருடைய எதார்த்த நடிப்பே படத்தின் பலமாக அமைந்திருக்கிறது. இவருக்கு இணையாக நடித்திருக்கும் ஆர்.வி.பரதனுக்கு முதல் படம் என்றாலும் அதனை எந்த இடங்களிலும் தோன்றும் படி அவரின் நடிப்பு இல்லை.

துணை நடிகர்களாக நடித்திருக்கும் அனைவரும் புதுமுகம் என்பதால் அவர்களுடைய நடிப்பு சில இடங்களில் நடிப்பு என்பதை வெளிபடுத்தும் விதமாகவே இருக்கிறது.

இப்படத்தின் கதையும் திரைக்கதையும் படத்திற்கு பலம். படத்தின் தொடக்கத்திலேயே தேவையற்ற கதையை சொல்லாமல் ஆரம்பத்திலேயே கதைக்குள் சென்று சுவாரசப்படுத்தியிருப்பது பாராட்டக்குறியது. இயக்குனர் ரமேஷ் சுப்ரமணியன் அவர் பணியை சரியாக செய்து முடித்திருக்கிறார்.

திரில்லர் படம் என்பதை ஒளிப்பதிவாளர் சந்தோஷ் பாண்டி அவருடைய காட்சிபதிவின் மூலம்

சுவாரசியபடுத்த முடியவில்லை. இசையமைப்பாளர் ஜெயகிரிஷ் அவருடைய பின்னணி இசையின் மூலம் கூடுதல் பலம் சேர்த்திருக்கிறார்.