முன்னாள் சட்ட அமைச்சர் ஜைட் இப்ராகிமை சிலாங்கூர் மந்திரி புசாராக்க டிஏபி திட்டமிடுவதாக தகவல் கிடைத்துள்ளது என சுங்கை புசார் அம்னோ தலைவர் ஜமால் முகம்மட் யூனுஸ் கூறுகிறார்.
“டிஏபி யில் உள்ள மலாய் நண்பர்களிடமிருந்து” கிடைத்த தகவல் என்று கூறிய ஜமால், டிஏபி அடுத்த பொதுத் தேர்தலுக்குப் பின்னர் ஜைட் இப்ராகிம் மந்திரி புசார் ஆக்கப்படுவார் என்றார்.
“டிஏபிக்கும் (இப்போதைய மந்திரி புசார்) அஸ்மின் அலிக்கும் ஒத்துப்போகவில்லை என்பதை அறிவோம்”, என ஜமால் இன்று அம்பாங்கில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
எதிர்வரும் தேர்தலில் பக்கத்தான் ஹரபான் சிலாங்கூரைத் தக்க வைத்துக் கொள்ளுமானால் சட்டமன்றத்தில் தனக்குத்தான் அதிக இடங்கள் கிடைக்கும் என்று டிஏபி நம்புகிறது.
“அதன்பின்னர் அவர்கள் டிஏபி பிரதிநிதிதான் மந்திரி புசாராக நியமிக்கப்பட வேண்டும் என்பார்கள். அதற்குத்தான் இப்போது வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்.
“நமது கவலை என்னவென்றால், சுல்தானிடம் மரியாதை குறைவாக நடந்து கொள்ளும் ஒருவரை எப்படி மந்திரி புசாராக ஆக்க முடியும் என்பதுதான்”, என்றவர் வினவினார்.
மலேசியாகினி சிலாங்கூர் டிஏபியைத் தொடர்புகொண்டு அதன் பதிலுக்காகக் காத்திருக்கிறது.
அடுத்த பொதுத் தேர்தலில் எதிர்கட்சி தான் வெற்றி பெறும் என்பதையறிய மகிழ்ச்ச்ச்ச்சி!