கிழக்கு ஜெருசலத்தை பாலஸ்தீன் தலைநகராக அங்கீகரிப்பீர்: முஸ்லிம் தலைவர்கள் கோரிக்கை

ஜெருசலத்தை   இஸ்ரேலின்   தலைநகராக    அங்கீகரிக்கும்   அமெரிக்க   முடிவுக்குக்   கண்டனம்   தெரிவித்த   முஸ்லிம்   தலைவர்கள்,   உலகம்  கிழக்கு   ஜெருசலத்தை    பாலஸ்தீனத்தின்  தலைநகராக   அங்கீகரிக்க    வேண்டும்   என்று   கேட்டுக்கொண்டனர்.

இஸ்தான்புல்லில்  50   முஸ்லிம்   நாடுகளின்   அவசர  உச்சநிலை  மாநாட்டை   ஏற்று   நடத்தும்   துருக்கியின்   அதிபர்   தயிப்  எர்டோகன்   பேசுகையில்,  அமெரிக்கா   அவ்வாறு    செய்த   முடிவின்   விளைவாக   இஸ்ரேலிய-  பாலஸ்தீன   தகராற்றில்   நடுவர்    பணியாற்றும்   தகுதியை   இழந்துவிட்டது   என்றார்.

“ஒருதலைப்பட்சமாக    செயல்படும்     அமெரிக்காவை    இஸ்ரேலுக்கும்   பாலஸ்தீனத்துக்குமிடையில்    நடுவர்  பணியாற்ற    அனுமதிக்கும்   பேச்சுக்கே   இனி   இடமில்லை”,  என  இஸ்லாமிய   ஒத்துழைப்பு   நாடுகள்  நிறுவனத்தின்   கூட்ட  முடிவில்   எர்டோகன்   கூறினார்.

“அடுத்து   நடுவர்  பணியாற்றப்போவது    யார்  என்பது   குறித்து   நாம்   விவாதிக்க    வேண்டும்”,  என்றாரவர்.